திராவிட கழக தலைவர் வீரமணி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் என கோரிக்கை ஒன்றிணை முன்வைத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு :-
தமிழ்நாட்டு தி.மு.க. ஆட்சியின் சிறப்பான கவனத்துக்கு....
“தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் கோயில் அர்ச்சகர்களாக - (ஆகமப் பயிற்சி பெற்று அரசு நியமித்த பள்ளிகளிலிருந்து பட்டயம் பெற்ற 205 - அனைத்து ஜாதியினரும் - பார்ப்பனர் உட்பட - 2 பேர் மறைந்த நிலையில் 203 பேர் சுமார் 15 ஆண்டுகளாக காத் திருக்கும் நிலையில் - 2 பேர் மட்டுமே நியமனம் முந்தைய ஆட்சியில் பெற்றனர்) ஆவதற்குத் தகுதி உடையவர்களாக அறிவிக்க
” 2006இல் ஆட்சிக்கு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய நாள் இன்று - மே - 16! தந்தை பெரியார் அவர்களது ‘நெஞ்சில் தைத்த முள்ளை’ அகற்றிடும் வகையில், அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி, 23.5.2006இல் அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது!
ஜாதி - தீண்டாமை ஒழிப்புத் திட்டமாக இச்சட்டத்தின்படி - காத்திருப்போர் நெஞ்சில் பால் வார்த்து, கருணையுடன் நியமித்து, கலைஞர் விருப்பமாம், தந்தை பெரியார் ‘நெஞ்சின் முள்ளை’ அகற்றி முழு வரலாற்று முத்திரையைப் பொறிக்க மாண்புமிகு மானமிகு முதல் அமைச்சரை வேண்டுகிறோம்.
இன்று வரலாற்றுக்குறிப்பு நாளாக நினைவூட்டுகிறோம் இவ்வாறு ஸ்டாலினுக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார் கொரோனா பெரும் தொற்றில் தமிழகமே சிக்கி சிதைந்து பொதுமக்கள் உணவிற்கு அல்லாடும் நிலை உண்டான நிலையில் வீரமணி வழக்கம் போல் இந்து மதத்தின் பிரிவுகளுக்கு இடையே கழகம் மூட்டும் செயலை மீண்டும் தொடங்குவது ஏன் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.