லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் தொடர் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ், விசிக கட்சியை தொடர்ந்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதிய சிக்கலை தொடங்கியுள்ளார். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதனால் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.
இந்தியா முழுவதும் விரைவில் லோக்சபா தேர்தல் தொடங்கவுள்ளது, தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இடையேயான போட்டி என இருந்த நிலையில் அந்த வரிசையில் தேசிய கட்சியான பாஜக இணைந்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கட்சியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், விசிக கட்சிக்கு கொடுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரிய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றதால் இழுபறி நடப்பதாக கூறப்படுகிறது.
தேசிய கட்சியான காங்கிரஸும் குறைவான தொகுதி கொடுப்பதால் அங்கும் இழுபறி நடந்து வருகிறது. அதன் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சியும் கறார் செய்துவருகிறதாம். அதாவது, கடந்த முறை லோக்சபா தேர்தல் சமயத்தில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார். எனவே, இந்த முறை மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என்பதில் கேள்வி இருந்தது. இதற்கிடையே மதிமுக இந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும் இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தைக் கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வைகோ. அதன்படி நாளைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த முறை போன்று உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி காதசிகளி வெற்றி பெற செய்து அதன் மூலம் திமுக பெருபான்மையை கூறி வந்தது. இந்நிலையில், விசிகவை போல வைகோவும் கறார் செய்வதால் திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி இழுபறி செய்வதால் படம் நடிப்பது, வெளிநாடு செல்வது போன்றவை ஒத்திவைத்து வருகிறார் கமல்ஹாசன்.