Cinema

வேலையைக் காட்டிய விஜய்... லியோ வெற்றிவிழா பெயரில் நடந்த பழிவாங்கும் படலம்...

actor vijay
actor vijay

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது, ஜெயிலர் படத்தின் விழாவில் கலந்து கொண்ட ரஜினி அதற்க்கு முன்பு 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்திற்கு சீண்டிய விஜய்க்கு கழுகு, காக்கா கதையை கூறி 'என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான்' என புரிய வைத்தார் என்று அவ்வப்போது பரவலாக விமர்சனங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து லியோ படம் வெளியீட்டுக்கு தயாரானது, லியோ படம் வெளியீட்டுக்கு தயாரானவுடன் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு விஜய் எப்படியும் பதிலடி கொடுப்பார் பொறுத்திருந்து பாருங்கள் என விஜய் ரசிகர்களால் கூறப்பட்டு வந்தது. ஆனால் சில ஏற்பாடு காரணங்களுக்காக லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து வெளியான லியோ படமும் ரசிகர்களைத் தவிர வேறு எவருக்கும் பிடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.


திரையரங்கு உரிமையாளர்கள் கூட லியோ திரைப்படத்தால் எங்களுக்கு நஷ்டம் தானே தவிர லாபம் கிடையாது திரையரங்கு பராமரிப்பு செலவிற்கு மட்டும்தான் லியோ படம் வசூலித்தது எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இரண்டாம் பாதி 'பிளாஷ்பேக்' காட்சிகள் சரியில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் விஜய்க்கு மட்டும் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது உறுதி கொண்டே இருந்தது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். லியோ பட வெற்றி விழா என நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது, சென்னை உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற லியோ பட வெற்றி விழாவில் லியோ பட குழுவினர் கலந்து கொண்டனர் இது மட்டும் அல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நிர்வாகிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். 

அப்போது அந்த வெற்றி விழாவில் பேசிய படத்தின் எழுத்தாளர் ரத்தினகுமார் 'நான் சினிமாவிற்கு வர முக்கிய காரணம் விஜய் தான், நான் சிறுவயதில் இருந்தே விஜய் ரசிகன் தொடக்கத்தில் விஜயின் புகைப்படத்தை யார் பார்ப்பார்கள் என பத்திரிகைகள் எழுதி வந்தன. ஆனால் தற்போது ஒரு புகைப்படத்தை காட்டியதும் திரையரங்கமே அதிர்கிறது, லியோ படத்தில் 'நான் ரெடி தான் வரவா' பாடல் கதைக்களத்துக்காக எழுதி இருந்தோம், ஆனால் அந்த பாடல் என்னவாக மாறியிருக்கிறது என்று நமக்கு தெரியும். விஜய் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லாரையும் சமமானவராக பார்ப்பார் எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என பேசினார் ரத்தினகுமார். 

இப்படி ரத்தினகுமார் பேசியது தான் தற்பொழுது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது அதாவது இது பின்னணி என்ன எனக் குறித்து சில சினிமா விமர்சகர்களிடம் பேசிய பொழுது பல உண்மைகளை கசிய விட்டார்கள். அவர்கள் கூறியதாவது ஜெயிலர் படம் வெற்றி, ஜெயிலர் படத்தின் விழாவில் ரஜினி கூறியது வேறு விஜய்யை சீண்டி விட்டது எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை லியோ படத்திற்கு ஒரு விழா எடுத்தே தீர வேண்டும் என ஆடியோ வெளியீட்டு விழாவை திட்டமிட்டார்கள், இந்த வசனத்தை ஆடியோ வெளியிட்டு விழாவில் பேச வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்தது தான்.

ஆனால் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காத காரணமாக லியோ படம் முடிந்தவுடன் ஒரு வாரத்தில் வெற்றி விழா ஏற்பாடு செய்து இப்படி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என ரஜினியை குறிப்பிடுவது போல பேசி விட்டார் ரத்தினகுமார், இதன் பின்னணியில் விஜய்தான் இருக்கின்றார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். ஏன் என கேட்ட பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்ட வேண்டும் என்பது விஜயின் இலக்கு அது மட்டுமல்லாமல் ரஜினிக்கு பதிலடி கொடுக்காமல் இருந்தால் விஜய்'யின் இமேஜ் என்ன ஆவது எனவே இவ்வளவு செலவு செய்து ஜெயிலர் படத்திற்கு பட விழாவில் ரஜினி பேசியதற்கு விஜய் பதிலடி கொடுத்துவிட்டார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்... மேலும் ரஜினிக்கு பதிலடி கொடுக்க கோடிகள் செலவழித்து இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதே உண்மை எனக்கூறுகின்றனர்.