World

சபாஷ்..!!கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்தவர்களை பற்றிய தவறான தகவல்..!! வாலிபர் சிறையிலடைக்கப்பட்டார்...!!

kalwan attack defaming arrested
kalwan attack defaming arrested

சபாஷ்..!!கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்தவர்களை பற்றிய தவறான தகவல்..!! வாலிபர் சிறையிலடைக்கப்பட்டார்...!!கடந்த ஆண்டு இந்தியாவின் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள் சிலர் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிர் இழந்தனர்.இதுபற்றிய தகவலை தவறாக சித்தரித்ததாக வாலிபர் ஒருவர் சீனாவில் கைது செய்யப்பட்டார்.38 வயதான க்யூஜிமிங் என்பவர் வெய்போ என்ற சமூக வலைதளத்தில் "இந்திய எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் இதனை சீன அரசு மறைக்கிறது" என பதிவிட்டிருந்தார்.அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும். இவரது க்ரேயான் பால் எனும் கணக்கை சீன அரசு கடந்த பிப்ரவரியில் தடை செய்தது.


கிழக்கு மாகாணமான நாஞ்சிங் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் "தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார்.இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நான்கு அதிகப்படுத்தி பதிவிட்டிருக்கிறார்.இது தேசத்தை அவமதிக்கும் செயல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீன் 1 இன்று காலை க்யூஜிமிங்கிற்க்குஎட்டுமாத கடுங்காவல் தண்டனை அறிவித்தது.

இதுகுறித்து பேசிய ஒரு அதிகாரி"2018ல்தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவதூறு செய்வதை தடைசெய்யும் குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது."தியாகிகள் மற்றும் வீராங்கனைகளை அவதூறு செய்வதை" தடைசெய்யும் சீனாவின் குற்றவியல் சட்டத்தின் புதிய ஏற்பாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர் இவர்தான்.கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் இந்தியாவிற்கும் இடையிலான மிக மோசமான எல்லை மோதலாகும்.

இறந்தவர்கள் மரணத்திற்குப் பின் "எல்லையைக் காக்கும் ஹீரோக்கள்" என்று கௌரவிக்கப்பட்டனர்.சமூக ஊடக இடுகைகளில் இது போன்ற தவறான தகவல்களை பரிமாறுவதால் தேச நன்மைக்கு குந்தகம் ஏற்படுகிறது.மேலும் கியுஜிமிங் "ஹீரோக்கள் மற்றும் தியாகிகளின் நற்பெயர் மற்றும் கௌரவத்தை அவமதித்துள்ளார். அவர் செய்த குற்றங்களை நீதிமன்றத்திலும் ஒப்புக்கொண்டார்" என்று கூறினார்..இந்தியாவிலும் இதுபோன்ற சட்டங்கள் வருமா என தேச அபிமானிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

...உங்கள் பீமா