அடுத்த உலகப் பொதுமுடக்கத்துக்கு தயாராகும் சீனா..! கண்டறியப்பட்டபுது வகை வைரஸ்..!!
வூகானில் இருந்து புறப்பட்டு உலகையேகுலைநடுங்க வைத்துக் கொண்டு இருக்கும் கொரானா வைரஸின் கொடூரத் தாக்குதல் இன்னும் முற்றுப்பெறாத நிலையில்,அதே கிழக்கு மாகாணத்திலிருந்து மற்றுமொரு புதிய நோய் பரவத் தொடங்கியிருக்கிறது.சீனாவின் கிழக்கு மாகாணத்தில் முதல்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணமான ஜென்ஜியாங்கில் 41 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோழிப்பண்ணை நடத்திவருகிறார்.அவருக்கு சில நாட்களாக கடுமையான ஜுரம் ஏற்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் அவரை ஜென்ஜியாங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போயுள்ளனர்.இது குறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்திற்கு தகவல் பரிமாறப்பட்டது.விரைந்து வந்த தேசிய சுகாதார ஆணையம் நோயை வகைப்படுத்தியது.இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இது புதிது என்றும், பறவைகளுக்கிடையே மட்டுமே தொற்றும் இந்த வகை காய்ச்சல் முதல்முறையாக மனிதருக்கு பரவியுள்ளது." என்றும் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிட்டிருக்கிறது.
மேலும் இது H10N3 வகை பறவைக்காய்ச்சல் என்றும் இது பெருந்தொற்றாக வாய்ப்பு மிககுறைவு எனவும் உலகிலேயே இந்த H10N3 வேறங்கும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறது.நோய் பாதிக்கப்பட்டவரின் கோழிப்பண்ணை மற்றும் அவரது இல்லம் ஆகியவற்றில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவரது குடும்பத்தாரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
"சப்பமூக்கனுக்கு எங்கிட்ட ஒரண்ட இழுக்கறதே வேலயாப்போச்சு" என வடிவேலு பாணியில் நெட்டிசன்கள் கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.
...உங்கள்
பீமா