24 special

அண்ணாமலை மாரிதாஸ் இடையே நடந்ததுதான் என்ன? மாரிதாஸ் சொல்லியது உண்மையா?

maridhas and annamalai
maridhas and annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மாரிதாஸ் நேற்றைய தினம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பல்வேறு நேரடி குற்றசாட்டுகளை வைத்தார் அதில் குறிப்பிட தகுந்தவை,10 பேக் ஐடிகளை வைத்து " வாழ்க வாழ்க " என்று கட்டமைப்பை உருவாக்கினால் வெற்றி பெற முடியாது.


1)முகநூலில் தொண்டர்களை வைத்து கொண்டு முன்னேற முடியாது.ஊடகங்களை சந்திப்பதாலோ ,சமூக வலைத்தளங்களில் இருப்பதாலோ ஓட்டு விழாது. 2) திராவிடம் + கொடுப்போம் என்ற கொள்கை ஏற்புடையதாக இல்லை.

3) மக்களோடு மக்களாக பயணித்து அவர்களின் வலியை கேட்டரிந்தால் மட்டுமே பாஜகவால் கட்டமைப்பை உருவாக்க முடியும். 4)உள்ளாட்சியில் வலுவான கட்டமைப்பில் பாஜக இல்லை.

5)இதனால் தான் நான் அரசியலுக்கு வர கால தாமதம் ஆகிறது என குறிப்பிட்டு இருந்தார். சவுக்கு சங்கர் யூடுப் சேனல் ஒன்றில் சொல்லிய குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மாரிதாஸ் பேசி இருந்தார்.

இந்த சூழலில் மாரிதாசின் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுக்கும் விதமாக அரசியல் பார்வையாளர் திருச்சி பாலு  கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- கட்சிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திரிக்கும்போது அதை நீர்த்துபோக செய்வது மிக மிக அவசியமான நகர்வாக தேவைப்பட்டது. 

எந்த ஒரு ஊடக பின்புலமும் இல்லாமல் ஒற்றை ஆளுமையாக கோபாலபுர உருட்டல் ஊடகங்களின் சந்தர்ப்பவாத கேள்விகளுக்கு அவ்வாறு பதில் சொன்னது சரியான அனுகுமுறை தான் என்று தோன்றுகிறது. எதிரி எறியும் அம்பை அவனுக்கே திரும்ப எறியும் யுக்தியாகத்தான் அது அமைந்தது. 

தனித்து போட்டி  என கடைசி நேரத்தில் முடிவான பின் குறுகிய காலத்தில் வேட்பாளர்களை நியமித்து மாவட்டம் தோறும் அறிமுகம் கூட்டம் நடத்தி குறிப்பிட்ட சில வார்டுகளில் நேரடி பிரச்சாரம் செய்து கடுமையாக உழைத்தார் மாநிலத்தலைவர் அண்ணாமலை. அந்த சமயத்தில் இரண்டு மணி நேரம் உரங்க நேரம் கிடைத்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. 

உள்ளாட்சி தேர்தலில் மரியாதைக்குரிய வாக்குகளை பாஜக பெற்றது என்பது மறுக்கமுடியாது. குறிப்பிட்ட ஒரு நாள் ஏழு கட்சி நிர்வாகிகள் கல்யாணத்திற்க்கு சென்று வந்த பிறகு இரவு இரண்டு மணிக்கு மேல்  #BGR நிறுவன ஊழல் குறித்த தரவுகளை கமலாலயத்தில் சரி பார்த்த பின் அடுத்த நாள் ஊடக சந்திப்பில் வெளிக்கொண்டு வந்தார்.

இடைவிடாத தொண்டர்களின் கூட்டத்தில் அனைவருக்கும் முகம் சுலிக்காமல் புகைப்படம் எடுத்துவிட்டு தான் செல்கிறார். கட்சியின் அடிப்படை தொண்டன் முதல் மாநில பொறுப்பில் இருப்பவர் வரை அனைவரையும் அண்ணா என்று மரியாதையுடன் உபசரிப்பது என அனைத்தைம் நேர்மறையாகத்தான் பார்க்கிறேன். 

கிராம மக்களிடம் அண்ணாமலை ஒரு பாஜக தலைவர் அவர் திமுக-வை கடுமையாக சாடுகிறார் என்பது அனைவருக்கும் கட்டாயம் தெரிகிறது. வெறும் சமூக வலைதளங்களில் அரசியல் செய்கிறார்கள் என்பது அவசரத்தில் வந்த வார்தைகளாகத்தான் தெரிகிறது. 

Star Worshipping அரசியலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் தமிழக மக்களிடம் ஆளும் கட்சி எதிர்ப்பு அரசியல் தான் சரியான நகர்வாக இருக்க முடியும். மாரிதாஸ் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வருட பொறுப்பு காலத்தில் நிறைகள் தான் மலை போல் இருக்கின்றன.

மாரிதாஸ் அவர்களின் தேவையும் பாஜக-விற்க்கு கட்டாயம் தேவையான ஒன்று தான் ஆனால் #அண்ணாமலை எனும் அதிவிரைவு சாலிட் பவர்புல் என்ஜின் பின் அனிவகுத்து பயனிப்பது திமுக போன்ற தீய சக்திகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை என குறிப்பிட்டுள்ளார் திருச்சி பாலு.

மற்றொரு அரசியல் பார்வையாளர் சுந்தர் ராஜ சோழன் தெரிவித்த கருத்து பின்வருமாறு : பொதுவாக தமிழகத்தில் மற்ற கட்சிகளை போல அமைப்பை வளர்ப்பது பாஜகவிற்கு சுலபமல்ல..ஜனசங் - ஜனதா காலத்திலிருந்தே அது சிரமமாகவே இருந்துள்ளது.2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீது அதிமுக என்ன குற்றசாட்டை வைத்ததோ,இதே குற்றச்சாட்டை 1980 தேர்தலில் ஜனதா கட்சி மீது அன்றைய அதிமுக வைத்தது..

இன்று வரை மூத்த அதிமுக உறுப்பினர்கள் அதை என்னிடம் நேரிடையாக சொல்லக் கேட்டுள்ளேன்.நேரு குடும்பத்திற்கு இங்கே கிராமங்களில் கூட இருக்கிற செல்வாக்கை கவனித்தால் தெரியும்,அதைப்பெற்ற இன்னொரு தலைவர் இந்தியாவில் கிடையாது.முதல் முறையாக நேரு,காந்தி பாரம்பரியம் அல்லாத,தமிழகம் முழுக்க தெரிந்த தேசிய தலைவர் மோடிதான்..அது சரியாகவா - தவறாகவா என்பது தனி..

கிட்டத்தட்ட 100 வருடமாக இங்கே வடவர் வெறுப்பு,சம்ஸ்கிருத வெறுப்பு,பிராமண வெறுப்பு,ஹிந்து எதிர்ப்பு,திராவிட நாடு என பல பிரச்சாரங்கள் பலமாக எடுபட்டுள்ளது.பல காங்கிரஸ்காரர்களே அதற்கு மயங்கினார்கள் என்பதே எதார்த்தம்..

1967 க்கு பிறகு,ஒரு தேசிய கட்சியால் தமிழகத்தில் ஆட்சியை நெருங்க முடியவில்லை என்பதை எளிமையாக தூக்கி எறிந்துவிட முடியாது.அதற்கு மேற்கண்ட எல்லா பிரச்சாரங்களும் மிக முக்கியமான காரணம்.

இதை எதிர்கொள்வதில் காங்கிரஸை விட பாஜகவிற்கு பெரிய சுமை உள்ளது..எப்படி திராவிட கட்சிகளில் திமுகவை அந்த தத்துவத்தின் அதிகார மூலமாக பார்க்கிறோமோ,அதே போல பாஜகவை தேசியத்தின்,ஹிந்து தேசியத்தின் மூலமாக பார்க்கிறார்கள்..

பாஜக தமிழகத்திற்கு விரோதமான கட்சியில்லை,அது தமிழகர்களுக்கு விரோதமான கொள்கையுடையது இல்லை என்பதை களத்தில் பிரச்சாரம் செய்வது சிரமம் அல்லது முடியவே முடியாது என்பதே என் புரிதல்.

திராவிட கட்சிகள் ஊழல் மிகுந்தது,அடாவடியானது என்பதை நம்மை விட தமிழக மக்கள் ஆழமாகவும்,அனுபவப்பூர்வமாகவும் புரிந்து வைத்துள்ளார்கள்.அதை விளக்கிச் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியதே இல்லை.. 'தெரிந்தே பேயே மேல்' என்று மக்கள் நினைக்கிறார்கள் அவ்வளவுதான்.ஆனாலும் அது பிரச்சாரத்திற்கு நமக்கொரு ஊன்றுகோல்..

வடவர்,சம்ஸ்கிருதம்,பிராமண ஆதிக்கம்,ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தைகள் களத்திற்கு போகும் பாஜகவினர் அன்றாடம் சந்திப்பார்கள்..இதை எவ்வளவு சொல்லியும் களத்தில் புரிய வைக்கவே முடியாது.இது எல்லாவற்றின் அடையாளமாக பாஜகவைத்தான் சொல்வார்கள்.இதில் எவ்வளவு உண்மை என்றே அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

பாஜக பட்டியல் சமூகத்துக்கு,OBC சமூகங்களுக்கு செய்த பணிகளை நீங்கள் எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்..முதல் முறையாக இடஒதுக்கீட்டை மருத்துவத்துறையில் திமுகதான் பெற்றுக் கொடுத்தது என்று பேசுவார்கள்.இன்று வரை 69% இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது அதிமுக என்றுதான் பேசுகிறார்கள்..அதற்கு சட்டப்பாதுகாப்பு செய்து கொடுத்த நரசிம்மராவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வராது..

ஆக இப்படி தேசிய கட்சிகளுக்கு பல வருடங்களாக தமிழகத்தில் என்ன பிரச்சனை உள்ளதோ,அது இங்கே பாஜகவிற்கு பல மடங்கு பெரிதாக உள்ளது..தமிழகத்தில் இத்தனை காலம் பாஜக வளராமல் இருந்ததற்கு காரணம் தலைவர்கள் மட்டுமல்ல.கருத்தியல் ரீதியாக அதற்கு நாம் மேலே கண்ட பல தடைகள் உள்ளது.அதனால்தான் 'திபாஜக' என்ற பதத்தை நான் எப்போதுமே பயன்படுத்துவது இல்லை..பலரால் குறி வைக்கப்படும் பாஜக தலைவர்கள்,திராவிட கட்சிகளின் பிரச்சாரத்தை உடைத்து களத்துக்கு போவதெல்லாம் எளிமையான விஷயமல்ல..

ஆனாலும் தமிழகத்தில் பாஜக என்கிற கட்சியின் முகத்தை பெரிய அளவு மாற்றியது திரு.முருகனை தலைவராக நியமனம் செய்தது.அதே போல அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, திரு.அண்ணாமலையை தலைவராக நியமித்தது அடுத்த பாய்ச்சல்..

இன்று எங்கு போனாலும் அண்ணாமலையின் பேச்சு விவாதிக்கப்படுகிறது.பல இளைஞர்கள் அண்ணாமலையின் தலைமையால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.தமிழகத்தில் பதட்டமில்லாமல் மீடியாவை அணுகும் தலைவனை அறிவாளி என்று பொதுசமூகம் ஏற்றுக்கொள்ளும்..அதில் அண்ணாமலை வெகுஜனத்திடம் வென்றிருக்கிறார்..

அதிமுகவினரே அண்ணாமலையின் பேச்சை ரசிக்கிறார்கள்.அதே போல அமைப்பு ரீதியாக படிப்படியான மாற்றத்தை அண்ணாமலை அவர்கள் உருவாக்குகிறார் என்பதை கீழ்மட்ட அளவில் என்னால் உணர முடிகிறது..இதெல்லாம் சில வருடத்தில் சாத்தியப்படாது..

என் கணிப்பின் அடிப்படையில் 2026 வரை அண்ணாமலைதான் தலைவராக இருப்பார்..அப்போதுதான் அவருடைய களப்பணி எப்படிப்பட்டது எந்த அளவுக்கு அவரால் கட்சியை வளர்க்க முடிந்துள்ளது என்று தெரியும்..

அடுத்தது,பாஜகவை நோக்கி மாற்று கட்சியினரும்,மக்களும் பழைய தடைகளை உடைத்து உள்ளே வர அண்ணாமலை மிக முக்கிய காரணியாக உள்ளார் என்பதை மறுக்க முடியாமல் என்னால் பார்க்க முடிகிறது..இந்த அமைப்பிற்குள் நின்று,மிகப்பெரிய நூற்றாண்டு சித்தாந்தங்களை எதிர்த்து,பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலை எடுத்துக் கொள்ளும் யுக்தியும் செயல்பாடும் அதிசயப்படும் விதமே உள்ளது..

இதில் அண்ணாமலை வெற்றியடைவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்..அவருக்கு என் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.