காஸ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தன் மீது தேச துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்வேறு குற்றசாட்டுக்களை ஒப்புக்கொண்டதுடன், விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் ஆகியோருடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் முக்கிய சம்பவமாக பார்க்க படுவது சென்னையில் 2018-ம் ஆண்டு IPL போட்டிகளை முன்வைத்து நடந்த போராட்டம் அதன் பிண்ணனி ஆகியவற்றில் யாசின் மாலிக்கின் பங்கு இருப்பதாகவும் இதில் தமிழ் சினிமா மற்றும் அரசியல்கட்சியை சேர்ந்த பலரை பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்த இருப்பதாக வெளிவரும் தகவலால் இயக்குனர் பாரதி ராஜா, அமீர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 9 -ம் தேதி இயக்குனர் பாரதி ராஜா தலைமையில் ஒரு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய பாரதி ராஜா , தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்தார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது எனவும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.
அதன் மறுநாள் சென்னையில் பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டன பாரதி ராஜா உள்ளிட்ட பலர் குறிப்பாக சீமான் போன்றவர்களும் கலந்து கொண்டனர், இங்கு தான் உலக அளவில் பெரும் தலை குனிவு உண்டானது அதாவது ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த பல ரசிகர்கள் தாக்க பட்டனர்.
மிக பெரிய அளவில் பதற்றம் உண்டானது, போட்டி நடைபெறும் மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது, இந்த காட்சிகளை வெளிநாட்டை சேர்ந்த பலர் பார்த்தனர், ஒரு கிரிக்கெட் போட்டியை கூட நடத்த முடியாத அளவில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு போய் இருப்பதாக வெளிநாட்டு பத்திரிகைகள் எழுதின.
இது நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கு சரியாக ஒரு வருடம் முன்பு நடந்தது, அப்போதே இந்த போராட்டத்தின் பின்னணியில் மிக பெரிய சதி திட்டங்கள் இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த போராட்டத்தில் யாசின் மாலிக் பங்கு இருப்பதாகவும் திட்டமிட்டு கேரளா தமிழ்நாடு மற்றும் வட கிழக்கு மாநிலங்களை குறிவைத்து வேலை செய்த அமைப்புகள் சிலரின் உதவியுடன் சென்னையில் மிக பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெற உதவி புரிந்ததாகவும் விசாரணையில் யாசின் மாலிக் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த சூழலில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் மீது பிரிவு 16 பயங்கரவாதச் சட்டம் மற்றும் பிரிவு 17 பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்டகுற்றசாட்டுகள் நிரூபிக்க பட்டு உள்ளனவாம். மாலிக் மீது UAPA பிரிவு 18 -பயங்கரவாதச் செயலுக்கான சதி மற்றும் பிரிவு 20 பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினர் ஆகியவற்றில் விரைவில் தண்டனை கொடுக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் தனியே ஒரு விசாரணை அமைப்பு ஐபிஎல் போட்டிகள் பின்னணி பண பரிமாற்றம் தொடர்பு ஆகியவை குறித்து விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும்.
இந்த விசாரணை வளையத்தில் பாரதிராஜா, சீமான், அமீர் இன்னும் பலர் கொண்டுவரலாம் என்று கூறப்படுகிறது, 2013-ம் ஆண்டே சீமான் யாசின் மாலிக்கை தமிழகத்திற்கு அழைத்து வந்து கடலூரில் பொது கூட்டம் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது இனி வரும் காலங்களில் இந்த வழக்கு விசாரணை விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.