
பல இடங்களுக்கு தற்போது உள்ள இளைஞர்கள் சென்றுவிடலாம் என்றாலும் அதில் சில ஆபத்துகளும் உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் காதலர்கள் தனியாக சில பகுதிகளுக்கு செல்லும்பொழுது அவர்கள் வழிப்பறி மற்றும் சில பிரச்சனைகளிலும் சிக்கி விடுகின்றனர். அதாவது காதலிக்க கூடியவர் தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஆண் பெண் இருவரும் தனியாக சந்திக்கும் பொழுது அந்த பகுதிகளில் பெரும்பாலான மக்கள் கூட்டம் இருக்காது அந்த இடங்களில் அவர்களை போன்ற சில இளம் ஜோடிகள் இருப்பார்களே தவிர குடும்பங்களின் கூட்டம் காணப்படாது அப்படிப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சொல்லும் பொழுது வழிப்பறியில் சிக்கி கொள்வார்கள் அல்லது தனியாக இருக்கும் காதலர்கள் இடம் சில்மிஷம் செய்து காதலனை அடித்து விட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். மேலும் காதலன் காதலி இருவரையும் அடித்து விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி அப்பெண்ணை கற்பழித்து விட்டு தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வாலிபர் பி டெக் படித்து முடி த்துவிட்டு வீட்டில் இருந்தபடியே ஐடி கம்பெனிகளில் வேலை செய்து வருகிறார். இவரும் அதே நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 19 வயது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயன்று வரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் இருவரும் வெளியில் சந்திக்க விரும்பியதை அடுத்து இரவு நேரம் சொத்தவிளை கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்படி சொல்லும் பொழுது இரவு நேரத்தில் தனியாக சென்றால் வீட்டில் விட மாட்டார்கள் என்பதற்காக அந்த பெண் தனது தம்பியை அழைத்துக்கொண்டு சென்று உள்ளார் இருப்பினும் தனது தம்பியை தூரத்தில் நிற்க வைத்து விட்டு தன் காதலனுடன் கைகோர்த்து சற்று தொலைவில் நடந்து சென்றதை பார்த்த இரண்டு மர்ம நபர்கள் இருவரும் தனியாக வந்தனர் என்பதை மறந்து கொண்டு தேவையில்லாமல் பேச்சு கொடுத்து சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்த காதலன் எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிய பிறகும் அந்த இருவரும் அந்த பெண்ணிடம் எவ்வளவு பணம் வேண்டும் என தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த ஜோடி கெஞ்சி உள்ளது. மேலும் உங்களுக்கு பணம் வேண்டுமா தருகிறேன் என கூறி சர்ச்சையில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 10,000 ரூபாயை ஜி பே மூலம் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் காதலனை பலமாக அடித்து விட்டு அந்த இளம் பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த காயத்தில் அடிபட்டிருந்த அந்த காதலன் அருகில் இருந்த ஊருக்குச் சென்று நடந்தவற்றை கூறி அங்கு இருப்பவர்களை அழைத்து வந்துள்ளார் ஆனால் அதற்குள் அந்த இளம் பெண்ணை அவர்கள் இருவரும் கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணின் காதலன் சுசீந்திரன் இது குறித்த புகாரை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார் மேலும் அந்த காதலன் இருவருக்கும் ஜிப்பே மூலம் பணம் அனுப்பிய நம்பரை வைத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இருவரையும் கண்டறிந்து அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் கைது செய்துள்ளனர். இளம் காதலர்கள் மற்றும் தம்பதிகள் இது போன்று பொது இடங்களுக்கு தனியாக செல்லும் பொழுது இது மாதிரியான சம்பவங்கள் மற்றும் பிரச்சனைகளில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் சுற்றுலா தளங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் தற்போது வலுவெடுத்துள்ளது.