24 special

எ.வ.வேலு இழுத்துவிட்ட வினையால் அலறியடித்து டி ஆர் பாலு செய்த காரியம்...!

Dr balu, av velu
Dr balu, av velu

தமிழகத்தில் திமுகவின் முக்கிய அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு பேசியதுதான் சிக்கலே..!  திமுகவின் அமைச்சர்கள் அவ்வப்போது கூட்டங்களில் பேசும்போது தவறுதலாக பேசிவிட்டு பின்னர் நான் அப்படி கூறவில்லை இப்படித்தான் கூறினேன் என்று மழுப்பவும் செய்வது தொடர்கதையாகி வருகிறது.. 


அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய நாட்டையும் பாஜக ஆட்சியையும் ஒன்றிணைத்து விமர்சித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பாஜகவினரிடம் வாங்கி கட்டிக் கொண்டார். அதாவது எ.வ.வேலு இந்தியா என்றால் வடக்கே தான் உள்ளது என்று கூறியது பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்றது மேலும் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினர் பல வாக்குவாதங்களை நடத்திய நிலையில் விவாதங்கள் சூடு பிடித்து நாடாளுமன்ற அவை சில நாட்களாக முடக்கப்பட்டது. 

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதம மந்திரி மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற வலியுறுத்திய பின் நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசுகையில் அவர்களுக்கு அதிரடியான பதிலை பாரத பிரதமர் மோடி வழங்கினார். 

குறிப்பாக எ.வ.வேலு கூறியதை வைத்து நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது, மத்திய அமைச்சர்கள் அனைவரும் திமுகவை குறி வைத்து பேசிய நிலையில் அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசும்போது திமுக அமைச்சர் ஒருவர் இந்தியா என்றால் வட இந்தியா தான் என்று கூறியிருப்பதற்கு காங்கிரஸ் முன்னால்  தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

மேலும்  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்த மத்திய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளிக்க வந்தபோது  கூட எ.வ.வேலு பேசியதை சுட்டிக்காட்டி பேசியதால் திமுகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி பேசுகையில் திமுக வின் அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்தியா என்றால் வடக்கே தான் உள்ளது என்று கூறி இருப்பது இந்தியாவில் தமிழகம் இல்லை என்பதை உணர்த்துகிறது என கூறினார். 

இவ்வாறு பாரதப் பிரதமர் மோடியே விமர்சனம் செய்யும் அளவிற்கு எ.வ.வேலு' வின் பேச்சு அமைந்தது திமுகவை பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதாலும் திமுகவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலும் தற்போது திமுக அலறி அடித்து காரியம் ஒன்றை செய்திருக்கிறது. 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பிரதம மந்திரி மோடி எ.வ.வேலு பேசியதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி பேசியவுடன் திமுகவின் மூத்த தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்ற சபா நாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திமுகவின் முக்கிய அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு குறித்து பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் பேசியதை நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியதோடு எ.வ.வேலு பேசிய வீடியோ காட்சிகளையும் சபாநாயகர் முன் சமர்ப்பித்தார் டி.ஆர்.பாலு, 

பின்னணியை விசாரித்தபோது எ.வ.வேலு பேசியதை வைத்து பாரத பிரதமர் மோடி வரைக்கும் நாடாளும் மன்றம் வரை எடுத்துச் சென்றது ஆபத்தின் அறிகுறி, இதனை காரணமாக வைத்தே திமுகவிற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும், ஏன் கட்சியின் அங்கீகாரம் வரை நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக ஆபத்தை உணர்ந்த அமைச்சர் டி ஆர் பாலு அலறியடித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.