24 special

அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள் !சில்லு சில்லாக சிதறும் இந்தியா கூட்டணி!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தழுவுவதற்கு பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாட்னாவில் முதன்முறையாக நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளை அழைக்கவில்லை என்ற புகார்களும் எழுந்து வந்தது. 


இதனால் எதிர் கட்சிக்குள்ளே மனஸ்தாபம் ஏற்பட்டது என்று கூறலாம்.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடகத்தில் உள்ள பெங்களூரில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது அழைக்காத கட்சிகளை எல்லாம் அழைத்து கிட்டத்தட்ட 26 கட்சிகளுக்கு மேல் பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தன. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் வைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும் இந்த பெயர் வைப்பதில் கூட எதிர்க்கட்சிக்குள்ளே பல போட்டிகள் இருந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய கூட்டணி பெயரை ஏற்க மறுத்ததால் சற்று சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இன்னும் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு எட்டு மாத காலமே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்தக் கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுக்க இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியா? காங்கிரஸ் கட்சியா ? என உட்கட்சி பிரச்சனை பூகம்பம் எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களும் சில வழக்குகளில் சிக்கி தற்போது சிக்கி மீள முடியாமல் இருந்து வருகின்றனர். 

இவ்வாறு எதிர்க்கட்சிகள்  கூட்டணி ஆபத்தான நிலையில் இருப்பதால் வருகின்ற தேர்தல் வரை கூட்டணி கட்சி நிலைத்திருக்குமா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் அடுத்த ஒவ்வொரு கட்சியாக இந்தியா கூட்டணியில் இருந்து நழுவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பூனேவில் அஜித் பவாரும் சரத் பவாரும் நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியது தற்போது அரசியல் வட்டாரங்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே அஜித் பவாரும், சரத் பவாரும் கட்சியைப் இரண்டாகப் பிரித்த நிலையில் தேசியவாத கட்சி தற்போது பிளவு பட்டு உள்ளது சரத் பவார் இந்தியா கூட்டணியில் இருப்பவர் ஆனால் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுபவர் என்பதால் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து பேசியது சரத் பாவார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விடுவாரோ என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது. மேலும் இதற்கு ஏதுவாக பிரதம மந்திரி மோடி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பதிலளித்த போது காங்கிரஸின் வாரிசு ஆட்சியால்தான் சரத்பாருக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்று சரத் பவாருக்கு ஆதரவாக பேசியதும் அவர்கள் இருவரும் மேடையை ஒன்றாக பகிர்ந்து கொண்டதும் சரத் பவார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் கூட்டணி மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்து விழும் விக்கெட்டால் இந்தியா கூட்டணி சில்லு சில்லாக சிதறும் பரிதாப நிலையில் உள்ளது. இப்படியே சென்றால் எப்படியும் இன்னும் சில மாதங்களில் இந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிலைக்காது, காங்கிரஸ் கட்சியை தனியே தவிக்கவிட்டுவிடும் என்று தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த கூட்டணி நிற்காது நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என கூறியது வேறு குறிப்பிடத்தக்கது.