தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தி மொழியை இந்தியர்கள் இணைப்பு மொழியாக பயன்படுத்த முன் வரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார், இது பல்வேறு தரப்பினர் இடையே ஆதரவு மற்றும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த சூழலில் தனியார் ஊடகம் ஒன்று உள்துறை அமைச்சர் பேச்சினை மையமாக கொண்டு விவாதம் நடத்தியது, இதில் எழுத்தாளர் பிரபாகர் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. பெரியார் இந்தியை எதிர்த்தார் இது பெரியார் பூமி என சொல்வதெல்லாம் சுத்த பொய்.
பெரியார் கூறியிருக்கிறார் எனக்கு இந்தி மீது வெறுப்பு உண்டாக காரணம் தமிழ் மீது கொண்ட பற்று இல்லை ராஜாஜி முதல்வராக இருந்தார், அவர் பிராமணர் அவரை எதிர்க்க வேண்டும் என்பதால் இந்தியை எதிர்த்தேன் மற்றபடி எனக்கு சனியன் தமிழ் மீது பற்று எல்லாம் இல்லை என பேசினார் இதுதான் பெரியார் பேசியது என அதிரடியாக குறிப்பிட்டார் பிரபாகரன்.
தமிழ் மொழியை பெரியார் இவ்வளவு இழிவாக பேசிய நபரா? அவரைதான் தற்போதைய அரசாங்கம் முன்னிலை படுத்தி வருகிறதா? ஏன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியை இவ்வளவு இழிவாக பேசிய நபரை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றனர் என பல்வேறு கேள்விகளை பிரபாகரனின் விமர்சனத்தை பார்த்த பலர் எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழலில் இந்தி எதிர்ப்பு குறித்து பிரபாகரன் குறிப்பிட்ட கருத்திற்கு பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் தலைவராக இருக்கும் வீரமணியின் விளக்கம் என்ன பல்வேறு கேள்விகள் இணையத்தில் பரவலாக பேசு பொருளாக மாறியுள்ளது. மொத்தத்தில் பெரியார் குறித்து தமிழகத்தில் உருவாக்க பட்ட பிம்பத்தை பிரபாகரன் தனது விவாதங்கள் மூலம் நொறுக்கி வருகிறார் என்றே சொல்லவேண்டும். பிரபாகரன் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.