தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ட்விட்டரில் அவரையே டாஃக் செய்து பதிவிட்ட கருத்தால் ஒரு பக்கம் விமர்சனமும் மறுபக்கம் கிண்டலும் எழுந்துள்ளது.
இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றுகருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவை டேக் செய்து “ அரசியல் சாசனத்துக்கு எதிராகப் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம்செய்ய வேண்டும்.
அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளை, ஒரு மத்திய அமைச்சர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தி திணிப்புக்குத் தமிழகத்தில் ஆதரவு கிடையாது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பிரதமரிடம் குறிப்பிட்டு இருந்தால் சரியாக இருந்திருக்கும்.
அல்லது குடியரசு தலைவரை கூட குறிப்பிட்டு இருந்தால் முறையாக இருந்து இருக்கும் ஆனால் ஒருவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவரிடமே குறிப்பிட்ட சம்பவம் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் பவித்ரா, திமுகவிற்கு இது ஒன்றும் புதிதல்ல துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என சட்டசபையில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என பேசுவார்கள்.
அந்த மசோதாவை யாரிடம் அனுப்புவார்கள் ஆளுநரிடம்தான் அனுப்புவார்கள் அவர் ஒப்புதல் கொடுக்க மாட்டார் என நன்றாக தெரியும், அதே பாணியில்தான் இப்போது அமிட்ஷாவை நீக்கவேண்டும் என அவரையே டாக் செய்து வியக்கதக்க கருத்தை பகிர்ந்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ் என விமர்சனம் செய்துள்ளார் பத்திரிகையாளர் பவித்ரா.
அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய ஒன்றிய அமைச்சர் @AmitShah -வை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
— Mano Thangaraj (@Manothangaraj) April 10, 2022
இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது.#Tamil