24 special

வணக்கம்..செய்திகள் வாசிப்பது நான்...! செய்திவாசிப்பாளராக வேண்டுமா? உடனே அணுகுங்கள்..!

Newsreader traning
Newsreader traning

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை நாம் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்து தெரிந்து கொள்கிறோம். அதற்கு மிக முக்கிய காரணம் செய்தி சேகரிக்கும் ரிப்போர்ட்டர்கள், செய்தியை மிக அழகாக வடிவமைக்கும் ஆசிரியர்கள், அதனை திரையின் முன் கொண்டு வரும் செய்தி வாசிப்பாளர்கள் என சொல்லலாம்.


நாம் தினமும் தொலைக்காட்சியில் செய்தியை பார்க்கும்போது, நாமும் இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கான வழிமுறை நிறைய பேருக்கு தெரியாது, ஆனால் இப்போது அதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கமே "செய்தி வாசிப்பாளர் பயிற்சி மையத்தை" தொடங்கி இருக்கின்றது.

அதில் முதல் பேட்ச் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. குறிப்பாக செய்தி வாசிப்பாளர், ரிப்போர்ட்டர், சப் எடிட்டர் இந்த மூன்று துறைகளில் மிக சிறப்பாக செயல்படுவதற்கு ஏதுவாக, தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் பணிபுரியும், பணிபுரிந்த மிகவும் அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும், ரிப்போர்ட்டர்களுமே வகுப்பு எடுக்க இருக்கின்றனர். 


இதெல்லாம் தவிர்த்து டிஜிட்டல் மீடியா மூலம், பணம் சம்பாதிப்பது எப்படி... எதுபோன்ற வீடியோக்களை உருவாக்க வேண்டும்... அந்த வீடியோக்கள் மூலமாக எந்தெந்த தளங்களில் பணத்தை பெற முடியும்... உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல விஷயங்களும் கற்றுத்தரப்பட இருக்கின்றது.

இது குறித்து முழு விவரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்றால் உடனடியாக 8668056774 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.