தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் சரி எதிர்க்கட்சியான அதிமுகவும் சரி முழுக்க முழுக்க பாஜகவை சுற்றியே அரசியல் களத்தை நகற்றி வருகின்றனர். திமுக நேரடியாக பாஜகவை எதிர்த்து அரசியல் செய்கிறது அதே நேரத்தில் அதிமுக பாஜகவை எதிர்த்து மறைமுகமாக அரசியலை செய்ய ஈடுபட்டுள்ளதாக அதன் சமீபத்திய நகர்வுகள் மூலம் அறிய முடிகிறது.
இந்த சூழலில்தான் சமீபத்தில் இரண்டு வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிக வைரலாகின, ஒன்று திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி பாஜகவை விமர்சனம் செய்தது மற்றொன்று அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்தது, இதில் உதயநிதி பாஜக என்றாலே ஆடியோ வீடியோ கட்சி என்று பேசி இருந்தார்.
இதற்கு பதில் கொடுத்த அண்ணாமலை காரசாரமாக பேசினார், முதலில் உதயநிதிக்கு நீட் தேர்வு குறித்து என்ன தெரியும், முதலில் (A+B)^2 பார்முலா தெரியுமா, அவரெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டாரு, நான் பேச விரும்பல ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவர் கையில் எடுத்து காட்டினாரே என பால்ட்டாயில் படத்தை மறைமுகமாக குறிப்பிட்டார் அண்ணாமலை.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக புலம்பி வருகின்றனர் உடன் பிறப்புகள் எங்கள் தலைவர் என்ன 10 ம் வகுப்பு பார்முலா கூட தெரியாதவரா? அண்ணாமலை வேண்டும் என்றே எங்கள் தலைவரை சிறுமை படுத்த வேண்டும் என்று உதயநிதிக்கு ஒன்றும் தெரியாது என அடித்து கூறுகிறார் இதை நிறுத்தி கொள்ளவேண்டும் என புலம்பி வருகின்றனர் உடன் பிறப்புகள்.
சின்ன குழந்தைகள் கூட சொல்லும் (A+B)^2 பார்முலா உதயநிதிக்கு தெரியுமா தெரியாதா என பள்ளி குழந்தைகள் கூட கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து இருப்பதாக உடன் பிறப்புகள் புலம்பி வருவது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.