ஈரோடு இடைத்தேர்தலில் சரியாக வேலை செய்யாத சில அமைச்சர்களை திமுக தலைமை அறிவாலயத்தில் அழைத்து ரைடு விட்ட விவகாரம் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது, 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கு மார்ச் மாதம் 2ம் தேதி முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது, திமுகவின் அமைச்சர்கள் அனைவரும் அங்கே முகாமிட்டு ஒவ்வொரு வார்டையும் தங்களுக்கு ஒதுக்கி எடுத்துக்கொண்டு பணிகளை செய்ய வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. மேலும் உத்தரவை தொடர்ந்து திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது, அதில் 11 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 31 பேர் நியமிக்கப்பட்டனர்.
அந்த குழுவில் கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ், கோவை நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர். ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என். நல்லசிவம், இல. பத்மநாபன், பா.மு.முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என் ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய்.பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி என திமுகவின் முக்கிய அமைச்சர் எம்.எல்.ஏ'க்கள் பட்டாளத்தையே இறக்கியது அறிவாலய தரப்பு.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணியை தொடங்கினார். குறிப்பாக மற்ற அமைச்சர்களை விட அதிகமாக வேலை செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அங்கிருக்கும் அதிகாரிகளை கவனித்துக் கொள்வது, அங்கு வந்து தங்கி இருக்கும் திமுகவினருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, திமுகவின் பூத் ஏஜெண்டுகளை கவனித்துக் கொள்வது, மேலும் இந்த இந்த வார்டு வாரியாக இவ்வளவு வாக்குகள் நமக்கு விழ வேண்டும் என தேர்தல் வியூகத்தை அமைப்பது, மற்றும் எந்தெந்த பகுதியில் எந்தெந்த மக்கள் இருக்கிறார்கள் என கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த மாதிரியான பிரச்சாரம் முறையை மாற்றியது என அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.
மறுபுறம் மக்களை பட்டியில் அடைத்து வைப்பது, அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வது, வெள்ளி பொருட்கள் கொடுப்பது, கொலுசு கொடுப்பது, பட்டுப் புடவை கொடுப்பது என ஒரு திருவிழாவை ஈரோடு கிழக்கில் நடத்தி முடித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதன் காரணமாக ஈரோடு கிடக்கு இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திமுக கூட்டணி 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் யாரெல்லாம் எப்படி வேலை செய்தார்கள் என அவர்கள் வேலை செய்ததை மதிப்பாக வைத்து திமுக தலைமை இரண்டாக பிரித்து பட்டியல் தயார் செய்துள்ளது.
ஒருபுறம் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகள், மறுபுறம் செயல்படாமல் ஒப்பேற்றிய நிர்வாகிகள் என இரண்டாக பிரித்து அறிக்கை தயார் செய்ததாம். இதனை தொடர்ந்து அறிவாலயத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுக்கள் வழங்கப்பட்டதாம். அதன் பட்டியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்றவர் அடக்கம், ஆனால் சரியாக வேலை செய்யாத சில நிர்வாகிகளை நேரில் அழைத்து ஒரு காட்டு காட்டியிருக்கிறது அறிவாயாலய தரப்பு.
அப்படி ரைடு விட்டது மட்டுமல்லாமல் உங்களை எல்லாம் நம்பி எப்படி நாடாளுமன்ற தேர்தலில் பணியை கொடுப்பது? இதே லட்சணத்தில் போனால் நமக்கு நாடாளுமன்ற தேர்தலில் 10 சீட்டு கூட கிடைக்காது. ஒரு தேர்தலுக்கே நீங்கள் இப்படி வேலை செய்யாமல் முடங்கி கிடக்கிறீர்கள் மற்ற தேர்தலை எல்லாம் எப்படி உங்களால் செய்ய முடியும், 40 தொகுதிகளிலும் நாம் 40 வெல்ல வேண்டும் ஆனால் இன்று அதிமுக, பாஜக இருக்கும் வேகத்தில் அவர்கள் தான் வருவார்கள் என கள நிலவரம் சொல்கிறது, உங்களை நம்பி எப்படி இந்த வேலையை கொடுக்க முடியும்? எடப்பாடி மீசையை பற்றி ஈரோடு கிழக்கில் பேசினார். அதற்கும் நீங்கள் எந்த வகையும் பதிலும் அளிக்கவில்லை.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எப்படி டெபாசிட் வாங்கியது? என அவர்களை போட்டு வறுத்தெடுத்து விட்டதாம் அறிவாலய தரப்பு. இப்படி கோடிகளை கொட்டி வெற்றி பெரும் நிலை நீடித்தால் நீடித்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரிய தொகுதிகளை கைப்பற்ற முடியாமல் போய்விடும் என திமுக தரப்பு நன்கு உணர்ந்திருக்கிறது. எனவே இவ்வாறு செயலை வேலை சரியாக செய்யாத அமைச்சர்கள் எல்லாவற்றையும் கூப்பிட்டு ரைடு நடத்தும் வேலையை தான் அறிவாலய தரப்பு செய்திருக்கிறது.
இதனால் திட்டு வாங்கிய பல மூத்த நிர்வாகிகள் 'சிலர் சம்பாதிக்கிறார்கள் செய்றாங்க, எங்களால சம்பாதிக்க முடியல செய்யல என புலம்பியபடியே சென்றார்களாம், மேலும் செந்தில் பாலாஜி மேல் பலர் காழ்புணர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் திமுகவில் அதிருப்தியாளர்கள் அதிகமாகி உள்ளதாக தெரிகிறது.