24 special

விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் நடந்த ஆச்சர்யம்...!

vijayakanth
vijayakanth

சென்னை முழுவதும் நேற்று விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களால் நிரம்பி இருந்தது,  இறுதி ஊர்வலத்தை பார்த்த பலரும் என்னையா இது இவ்வளவு மக்கள் இப்படி காத்து இருந்து விஜயகாத்திற்கு அஞ்சலி செலுத்து கிறார்களே என்று வியந்து போகினர் அந்த வகையில் தற்போது எவ்வளவு கூட்டம் கூடியது மக்கள் மனநிலை என்ன என்பது குறித்து மத்திய மற்றும் மாநில உளவுத்துறை கணக்கு எடுத்து இருக்கிறதாம் அந்த தகவல் தற்போது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம். டிசம்பர் 29 காலை முதல் பிற்பகல் வரை சாரை சாரையாக மக்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்துகொண்டே இருந்தனர்பலரும்தங்கள்வேலைக்குவிடுப்புஎடுத்துசென்னைவந்தனர், ஒரு மணி வரைக்கும் தான் அஞ்சலி செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்ததால்  விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தாமதமானது.  பிறகு ஒரு வழியாக அஞ்சலி செலுத்துவதற்கு மக்களை அனுமதிக்காமல் நிறுத்தி அதன் பின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.


மாலை  6 மணியளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகமான கோயம்பேடுக்கு சென்றடைந்தது.  வழியெங்கும்  ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஊர்வலமாக சென்றவர்கள், ஆங்காங்கே சாலையோரம் நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் என்று ஒட்டு மொத்தமாக கணக்கு பார்த்தால்  28, 29 தேதிகளில் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருக்கும் என்று அரசுக்கு நேற்று  மாலை  தகவல் கிடைத்திருக்கிறது.ஜெயலலிதா கருணாநிதி என இருவரும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள், அவர்களின் கட்சிகள் 35 சதவிகிதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ளவை  இப்படிப்பட்ட காரணங்களால் அவர்களுக்கு லட்சங்களில் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.அதேநேரம் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர் ஆக்டிவ் அரசியலில் ஈடுபட்டு முழுதாய் ஏழு வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இன்றும் விஜயகாந்துக்கு கூடிய சுமார் 2.5 லட்சம் பேர் என்ற கூட்டம் பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் டிவியிலும், யு ட்யூபுகளிலும் லைவ் ஆகும் காட்சிகளை கண்டோர் மொத்தம் 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்றும் அரசுக்கு கிடைத்திருக்கும் புள்ளி விவரங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.