9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது, பல இடங்களில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை ஆளும் கட்சியான திமுகவின் தேர்தல் நேர செயல்பாடுகள் உறுதி செய்தன. இந்த சூழலில் இந்த தேர்தல் வெற்றியில் பஞ்சாயத்து களுக்கும் குறைவில்லை.
அப்படி ஒரு சம்பவம் தான் tஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அரங்கேறியுள்ளது, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகிய இருவருக்கும் தங்கள் ஆதரவாளர்களை ஒன்றிய தலைவராக தேர்ந்து எடுக்க போட்டா போட்டி போட்டதாகவும்.
இறுதியில் தேவராஜ் தரப்பு சாலையில் அமர்ந்து கதிர் ஆனந்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், செய்திகள் வெளியாகின, மேலும் இது குறித்த வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியானது, கட்சியினர் இடையே சலசலப்பை உண்டாக்கியது, நடைபெற்ற உட்கட்சி சம்பவம் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இது குறித்த என்ன நடந்தது என போராட்டத்தில் ஈடுபட்ட தேவராஜை அழைத்து விசாரணை செய்துள்ளார் முதல்வர், அப்போது தேவராஜ் எதிர்க்கட்சியினர் உடன் சேர்ந்து கொண்டு துரைமுருகனும் அவரது மகனும் சாதி அரசியல் செய்கின்றனர், மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி கதிர் ஆனந்த் ஆதரவாளரை எதிக்கட்சி கவுன்சிலர்கள் மூலம் வெற்றி பெற முயற்சி செய்தனர்.
என பல குற்றசாட்டுகளை கொடுத்துள்ளார், ஆனால் முதல்வர் தரப்பில், தேவராஜ் கொடுத்த புகார் பட்டியல் மீது நம்பக தன்மை இல்லாத காரணத்தால், இந்த விவகாரம் குறித்து உட்கட்சி அரசியல் நிலவரத்தை கவனித்துவரும் உளவுத்துறை அதிற்காரியை அழைத்து உண்மையில் ஆலங்காயம் தேர்தலில் என்ன நடந்தது என விரிவான அறிக்கை ஒன்றை தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய உளவு அமைப்புகள் கொடுத்த நியூஸ், மாவட்ட செயலாளர் தேவராஜ் பதவிக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது, திமுக பொது செயலாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் இருவரும் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்ற புகாரை ஒப்பித்த தேவராஜ் குடும்பமே குறிப்பாக மகன்கள், மருமகள், மச்சான் என அனைவரும் பதவியில் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது ஜோலார்பேட்டை திமுக மாவட்ட. செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருக்கும் தேவராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர் ஒருவர் டாக்டர் செந்தில், திமுக மருத்துவர் அணியில் இருக்கிறார் அடுத்ததாக பிரபாகரன். இது தவிர்த்து தேவராஜின் மச்சான் அசோகன் என்பவர் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார்.
இது போதாது என தனது இரண்டாவது மகன் பிரபாகரனின் மனைவியான காயத்திரியைதான் தற்போது ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்ய தேவராஜ் முடிவு செய்துள்ளார்,இப்படி குடும்ப அரசியல் தலை தூக்கியதே ஆலங்காயம் ஒன்றிய தலைவர் தேர்தலில் மோதலில் முடிய முதல் காரணம் என கூறப்படுகிறது.
அத்துடன் தேர்தலுக்கு முன்னர் திமுக கவுன்சிலர் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கதிர் ஆனந்த் நேரடியாக தேவராஜ் முன்னிலையில் மூன்று லட்சம் தேர்தல் செலவிற்கு கொடுத்துள்ளார், ஆனால் தேவராஜ் தனது புகாரில் முழுதேர்தல் செலவும் தானே செய்ததாக தலைமையிடம் குறிப்பிட்ட நிலையில், உண்மையில் தேர்தலுக்கு செலவு செய்தது கதிர் ஆனந்த் தரப்புதான் என்ற உண்மையும் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் செலவு செய்யாத தேவராஜ் தரப்பு, தேர்தலுக்கு பின்னர் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்களை தனது மருமகளுக்கு ஆதரவாக வாக்கு அளிக்க 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை பேரம் பேசினார்கள் என்ற உண்மையும் உளவு துறை அறிக்கையில் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் தேவராஜ் சொந்த தொகுதி பக்கம் செல்வாக்கு இல்லாதநிலையில், சாதி ரீதியாக துரைமுருகன் மற்றும் அவரது மகன் மீது குற்றசாட்டுகளை முன்வைத்து, கதிர் ஆனந்த் ஆதரவாளர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கி அந்த இடத்தில் தனது இருமகன்களை கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்திய தகவலும் முழுவதுமாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை முதல்வர் ஸ்டாலின் பக்கம் செல்ல, துரைமுருகனிடம் என்ன அண்ணே விஷயம் வேறு மாதிரி என் காதுக்கு வந்தது ஆனால் நடந்தது ஒன்றாக இருக்கு இருக்கு என சொல்ல அரசியலில் நமக்கு வெளியில் எதிரிகள் இருப்பதை காட்டிலும் உள்ளக்குள் தான் அதிகம் இருக்கிறார்கள் என அவரும் சிரித்து கொண்டே பதில் அளித்ததாக கூறப்படுகிறது.விரைவில் உட்கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கியது மட்டுமல்லாமல், சாலையில் அமர்ந்து கட்சியின் பொது செயலாளர் தரப்பிற்கு எதிராகவே போராட்டத்தில் ஈடுபட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
விரைவில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது போன்ற பாதிப்புகள் கட்சிக்குள் மீண்டும் எழாமல் இருக்க அதிரடி காட்ட இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.