24 special

திமுகவுக்கு ஆதரவு கொடுத்த முக்குலத்தோர் புலிப்படை... பின்னணியில் நடந்தது என்ன..?

Stalin, Karunas
Stalin, Karunas

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் முதல் சிறிய அரசியல் கட்சியினரும் தங்களது ஆதரவை திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார். இது சமூக வலைதளத்தில் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் எந்த ஒரு மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் வெளியாகவில்லை. மேலும், கருனாஷை திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற தகவலும் வெளியகியுள்ளது.


சினிமாவை தாண்டி அரசியலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பில் அரசியலில் ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். முன்னதாக 2016 ம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வந்த கருணாஸ் எப்படியாவது சட்டமன்றத்திற்கு போக வேன்டும் என்று சசிகலாவிடம் ஆதரவு கேட்டதன் பேரில் கருணாஸ் போன்று அரசியல் பின்புலம் இல்லாத ஆட்களைக் களத்தில் இறக்க சசிகலா முடிவெடுத்ததன் விளைவே கருணாஸுக்கு எம்எல்ஏ வாய்ப்பு கிடைத்தது. அப்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் ஜெயலலிதாவிடம் போராடி சீட்டை வாங்கிக் கொடுத்தார் சசிகலா.

சினிமாவில் நடிகர், பாட்டு கூத்து என்று இருந்த கருணாஸ்  திடீர் தீவிர அரசியல்வாதியாகி, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று கூவத்தூர் ஃபார்முலாவில் முக்கிய பங்கம் வகித்து முதலமைச்சருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளார். கருணாசின், இந்த திடீர் அரசியல் வளர்ச்சி நிச்சயம் ஆச்சரியமான ஒன்றுதான். எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் போது கூவத்தூரில் கருணாஸும் பங்கேற்றார். அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது என்று அறிவித்தார்.

இந்நிலையில் , இன்று திடீரென்று கருணாஸ் திமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு என்று கூறியுள்ளார். இது திமுகவுக்கே ஆச்சர்யம் ஏனென்றால் திமுகவை சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் யாரும் கருனாஷை சென்று ஆதரவு கோரவில்லையாம். இன்று கருணாஷே முன் வந்து நான் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறேன் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியுள்ளாராம். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் கூட அதிமுக தரப்பில் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக புகைப்படம் வெளியானது. 

ஆனால் , கருணாஸ் அவராகவே இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிமுக மன்சூர் அலிகான் அழைத்து பேசியது சர்ச்சையாக மாறியது காரணம் அதிமுக கூட்டணி இல்லாமல் திணறி வருவதாக பேசப்பட்டது. அதனால் தான் கருணாஸ் திமுகவை சந்தித்தது பெரியதாக ஊடகத்தில் செய்திகள் வெளியாகவில்லை. திடீர் சந்தித்து ஆதரவு தெரிவித்தது என்பது திமுக தரப்பில் வெளியாகும் தகவல் சமீபத்தில் கூவத்தூர் விவகாரத்தில் திரிஷா பெயருடன் கருணாஸ் பெயர் அடிபட்டதால் அதனை திசை திருப்பவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணியின் பக்கம் இருந்த கருணாஸ் கூவத்தூர் சம்பவத்தில் முக்கிய அங்கமாக இருந்தார். அதன்பின் எடப்பாடி பக்கம் செல்லாமல் திமுக கூட்டணிக்கு பக்கம் சாய்ந்தார். எனினும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் தான் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கருணாஸ என்பது குறிப்பிடத்தக்கது.