தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேலைகள் தீயாக நடந்து வருகிறது, திமுக, அதிமுக இரு கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து வருகிறது. நேற்று திமுக கட்சி சார்பாக வேட்பாளர்களை அறிவித்தது. கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வேட்பாளரை அங்கு அறிமுகம் செய்துள்ளது. 21 பேர் விருப்ப மனு கொடுத்த நிலையில் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி திமுக வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதுஅகு காரணமே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு கொடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், செந்திலாபாலாஜி கொடுத்த ஐடியாவின் மூலம் கோவைக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் அங்கே திமுக எப்படி பணிகளை செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக சார்பாக கொங்கு பகுதிக்கு தேர்தல் பணி பொறுப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளை திமுக வேகமெடுத்தவுள்ள நிலையில் கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜி இல்லாமல் யார் வேலைகளை செய்வார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளாராம். சட்டவிரோத பண பரிவிர்த்தனையில் சிக்கிய முன்னால அம்சிங்ஹ்ர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறார். சிறையில் இருந்து வரும் அவர் இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லாமல் தேர்தலை எப்படி சந்திக்க போகும் என்ற கேள்வி திமுக தலைமையிடம் எழுந்து வந்தது.
சமீபத்தில், செந்தில் பாலாஜியை சிறையில் சந்தித்த நபரிடம் திமுக தலைமைக்கு தகவல் ஒன்றை கொடுத்துள்ளாராம். அதாவது, கோவையில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கோவையில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம். என கூறியுள்ளாராம். இதனை திமுக தலைமையும் முழு ஆதரவு கொடுத்துள்ளதாம். அதாவது, கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை செந்தில் பாலாஜி கரைத்து குடித்தவர் என்பதால் சம்மதம் தெரிவித்துள்ளதாம்.
அவர் அப்படி சொன்னதன் அடிப்படையிலே கோவையில் இந்த முறை கூட்டணி கட்சியை களமிறக்காமல் திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளனராம். கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்பாலாஜி எப்படி திமுகவின் வளர்ச்சிக்கு பங்கு வகித்தாரோ அதேபோல் கணபதி ராஜ்குமாரும் பணிகளை செய்து வந்தார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தாலும் திமுகவுக்காக பணிகளை செய்து வருகிறாராம். குறிப்பாக திமுக செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டுவர முயற்சி எடுக்காத நிலையிலும் திமுகவின் வளர்ச்சிக்கு சிறையில் இருந்தே பாடு படுகிறார் என்கிற தகவல் வந்துள்ளது. கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜோதி மணி மீண்டும் போட்டியிடுவார் என்ற நிலையில் அவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் செட் ஆகாது என்பதால் தனது கரூர் தொகுதியை விட்டு கோயம்பத்தூர் தொகுதியை குறி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பாஜக கட்சி தனது வேட்பாளர்களை அறிவிக்காததால் வேட்பாளர்களை அரிவித்த பின் இன்னும் களம் கொங்கு பகுதியில் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.