24 special

என்ன செய்ய போகிறார் ஜோசப் விஜய்? அமீர் கானே ஒன்னும் பண்ண முடியல! ஞாபகம் இருந்தா சரி...!

Amir ,vijay
Amir ,vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் விஜய், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, அவரது படங்களுக்கு என திரை துறையினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.


இந்த நிலையில் நடிகர் விஜய் படங்கள் பல்வேறு எதிர்ப்புகளை கடந்தே வெளிவந்த வண்ணம் இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றன, தலைவா படத்தில் விஜய்க்கு தொடங்கிய எதிர்ப்பு சமீபத்தில் திரைக்கு வர இருக்கும் வாரிசு திரைப்படம் வரை தொடர்கிறது, இது ஒருபுறம் என்றால் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய, நடந்த இரண்டு முக்கிய விஷயங்கள் அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்து இருக்கிறது.

ஒன்று விஜய் அவரது பெற்றோரை 10 தோடு பதினொன்றாக நிற்கவைத்து சந்தித்து சென்றது மற்றொன்று விஜய் சொன்ன குட்டிகதை, விஜய் சொன்ன குட்டி கதை மூலம் அஜித், உதயநிதி, பாஜக என மறைமுகமாக பேசியது அரசியல் தெரிந்த அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

இந்த சூழலில் விஜய்க்கு சில வரலாற்று சம்பவங்களை சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது, தனது பெயரை ஜோசப் விஜய் என அழுத்தி கூறி இருக்கிறார் விஜய் இது விஜய் தன்னை கிறிஸ்தவர் என அடையாள படுத்தும் முயற்சி என்று கூறப்பட்டாலும் அங்கு தான் எதிர்வினையே காத்து இருக்கிறது, எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் ரசிகர்கள் ஏற்று கொள்வது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்.

என்னதான் வட மாநிலங்களில் இந்துத்துவா கொள்கை ஊறி போயிருப்பதாக கருத்துக்கள் இருந்தாலும் பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை இது நாள் வரை கான் நடிகர்களே உச்சம் தொட்டு வந்து இருக்கின்றன, ஆனால் அவர்கள் சில நேரங்களில் தெரிவித்த கருத்துக்கள் அவர்களுக்கே எதிராக தற்போது விளையாடுகிறது.

அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான லால் சிங் சட்டா திரைப்படம் என்ன ஆனது என இந்திய அளவில் சினிமாவை கவனிக்கும் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் பல ஆண்டுகள் முன் அமிர்கான் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு இப்போது வினையாக முடிகின்றன.

அதே போன்று விஜய்யும் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்போது அவரது முழு பெயரை சுட்டி காட்டி அதை விவாத பொருளாக மாற்றினால் அது இன்று விஜய்க்கு இலவச விளம்பரத்தை கொடுக்குமே தவிர எதிர்காலத்தில் சிக்கலை உண்டாக்கும் என்கின்றனர் நுட்ப சினிமா அரசியலை கவனித்தவர்கள்.

தற்போது ஆளும் கட்சியின் குடைச்சலை சமாளிக்க முடியாமல் இருக்கும் விஜய் நாளை மத ரீதியான முத்திரை விழுந்தால் அமிர்கானின் இன்றைய நிலைமைதான் அவருக்கும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.