தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினர் குறித்த சொத்து பட்டியல் தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது, விரைவில் சிபிஐயில் நான் வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து புகார் அளிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்த சூழலில் வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய ஒரு நாளில் அண்ணாமலை டெல்லி சென்று புகார் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால் தமிழகத்தை சேர்ந்த முக்கிய சினிமா துறையில் பல ஆண்டுகளாக தயாரிப்பாளராக பணியாற்றிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலையை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது..
தமிழக அரசியல் சூழல முக்கிய காரணமே சினிமா துறை தான் நன்றாக கவனித்து பார்த்தால் தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு ஆட்சியில் இருந்த அனைவரும் சினிமா துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்களை சினிமா துறையில் ஈடுபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் புதிது புதிதாக வந்து, தமிழ் சினிமாவின் தரத்தை குறைத்து விட்டார்கள், கணக்கில் வராத பணத்தை வாரி இரைத்து நடிகர்கள் முதல் நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரின் சம்பளத்தை 5 மடங்கு உயர்த்தி விட்டார்கள், இதன் மூலம் நேர்மையாக தமிழ் சினிமாவில் படத்தை தயாரிக்கும் நபர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் 10 % சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே நேர்மையாக வரி செலுத்து வருவதாகவும், பல்வேறு குளறுபடிக்கள் நடக்கிறது, நன்றாக கவனித்து பாருங்கள் தேர்தல் வரும் நேரங்களில் தொடர்ச்சியாக பெரிய ஹீரோக்களை வைத்து சொதப்பல் படங்கள் எடுக்கப்படுகிறது.
படத்திற்கு 100 கோடி செலவு ஆன நிலையில் 300 கோடி என வெளியில் பேச படும் இந்த பணமெல்லாம் எங்கு செல்கிறது என தெளிவாக பல்வேறு தகவலை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது, தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் என இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது என்பதால் உடனடியாக தமிழக அரசியலில் மாற்றம் உண்டாக வேண்டும் என்றால் தமிழ் சினிமாவும் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம்.
விரைவில் தமிழ் சினிமாவை சேர்ந்த தலைவர்கள் பலர் மக்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்க விருப்பி தாங்களாக தங்களது சொத்து பட்டியல், வருமானம், வருமான வரி செலுத்தியதற்கான தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட இருக்கிறார்களாம்.
அவர்கள் வெளியிட்ட பின்னர் பல்வேறு நடிகர்கள் இயக்குனர்கள் தங்களது சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் அப்படி அவர்கள் சொத்து பட்டியலை வெளியிட இல்லை என்றால் பொதுமக்கள் மத்தியில் சமூக கருத்துக்கள் அரசியல் கருத்துக்களை சினிமாவிலும் சமூக ஊடகங்களிலும் பேசுவீர்கள் ஆனால் நேரில் சொத்து பட்டியலை வெளியிட மாட்டிர்களா என்ற விவாதம் எழும் எனவே தற்போது அரசியலுக்கு வருவதாக கூறப்படும் விஜய் தொடங்கி, சமூக கருத்துக்களை பேசும் சூர்யா குடும்பம் உள்ளிட்ட அனைவரும் சொத்து பட்டியலை வெளியிட வேண்டிய தேவை உண்டாகும் என்று கூறப்படுகிறது.
Dmk files போன்று tamil cinema files ஒன்று வெளிவந்தால் மிக பெரிய அரசியல் தாக்கத்தை உண்டாக்கும் என கூறுகின்றனர் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்.
தமிழ் சினிமாவில் அரசியல் மற்றும் சமுதாய சீர்திருத்தம் குறித்து பேசும் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் மற்ற நடிகர்களுக்கு முன் உதாரணமாக தங்களது குடும்ப சொத்து விவரங்களை வெளியிடுவார்களா? என்ற கேள்வி இப்போது எழுந்து இருக்கிறது? விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளும் தற்போது எழுந்து இருக்கிறது.