24 special

தேசிய கொடியுடன் பொற்கோவிலுக்குள் செல்ல தடை!! இது இந்தியா இல்லை!!


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவிலுக்குள் தேசிய கொடியை முகத்தில் வரைந்து சென்ற பெண் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தனது முகத்தில் மூவர்ண கொடியை வரைந்து வந்த பெண்ணை கோவில் நிர்வாகி தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் " இது இந்தியா தானே! இந்தியாவில் நம் தேசிய கொடியை வரைந்து வருவது தவறா என்று கேட்டுள்ளார்"

அதற்கு அந்த நிர்வாகி இது இந்தியா இல்லை பஞ்சாப் என்று பதிலளித்துள்ளார். அப்போது பஞ்சாப் இந்தியாவில் இல்லையா என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் அந்த நிர்வாகி.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் . பொற்கோயில் நிர்வாகத்திற்க்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை கூற துவங்கினார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பொற்கோவில் நிர்வாகத்தின் பொதுச்செயலாளர் இப்போது

அந்த பெண்ணிடம் மணிப்பு கேட்டுள்ளனர்.மேலும் இந்திய தேசிய கொடியிடன் வர எந்த ஒரு தடையும் இல்லை என்றும். அந்த பெண்ணிடம் நடந்தற்கு மன்னிப்பு கேற்பதாகவும் கூறியுள்ளனர்.