24 special

தேனியில் நடக்கும் அட்டுழியம்!

dhiran movie issue
dhiran movie issue

சில வருடங்களுக்கு முன்பு பெரும்பாலானோர் இரவில் வெளிவருவதை தவிர்த்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் வழிப்பறி! இப்படி பொதுவாக வழிப்பறியில் ஈடுபடுவோர் இருட்டான பகுதியில் மறைந்திருந்து அப்பகுதியில் வழியாக செல்லும் தனிநபரை கூறி வைத்து தாக்கி அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை திருடி செல்வது! ஒருவேளை அன்றிரவு தனி நபர் யாரும் சிக்கவில்லை என்றால் குடும்பத்துடன் வருபவர்களையும் குறி வைத்து தாக்கி அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி செல்கின்றனர். இந்த சம்பவத்தின் பொழுது பொதுமக்கள் யாரேனும் அவர்களை தாக்க முற்பட்டால் வழிப்பறியில் ஈடுபடுவோர் அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள்! தமிழ் திரையுலகில் இது போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதிலும் குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பை வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் இது போன்ற வழிபறி சம்பவம் பற்றிய உண்மை விவகாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்! அதோடு நெடுஞ்சாலை என்ற படமும் நெடுஞ்சாலையில் வழிப்பறி ஈடுபடும் கதையை மையமாக எடுக்கப்பட்டது.. எதற்காக இப்போ வழிப்பறி பற்றி பேசுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம், ஏனென்றால் இதுபோன்ற உண்மைச் சம்பவம் தற்பொழுது நடந்துள்ளது! நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் கொள்ளைக்காரர்கள்! 


அதிலும் சுற்றுலாப் பயணிகள், விடுமுறை காலங்களில் உள்ளூர் மக்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த மக்கள், இளைஞர்கள் என பலரும் விரும்பிச் செல்லும் பகுதியின் நெடுஞ்சாலையில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி முழுவதையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெரியகுளம் - தேனி நெடுஞ்சாலையில் ஒருவர் தன் மனைவி உடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இரவு 12 : 30 மணி அளவில் திடீரென்று கார் மீது கல் விழுந்த சத்தம் கேட்டுள்ளது, அந்த சத்தம் கேட்டவுடன் அவரது மனைவி காரை நிறுத்தி சொல்லி உள்ளார் ஆனால் இவர் நிறுத்தாமல் அங்கிருந்து விரைந்து சென்றுள்ளார். பிறகு தான் தெரிகிறது அந்த காரில் தூக்கி எறியப்பட்ட கல் எதார்த்தமாகவும் தெரியாமலோ வேறு வண்டியிலிருந்து மோதி பட்ட கல்லாகவோ இல்லை கார் கண்ணாடியை குறிவைத்து மிகவும் அருகில் இருந்து பலமாக வீசப்பட்டுள்ளது என்பது அந்தக் காரில் ஏற்பட்ட சேதம் மூலம் தெரிகிறது. 

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பாதிக்கப்பட்ட நபரே விவரமாக தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியகுளம் to தேனி சாலையில் வந்து கொண்டிருந்தேன். திடீரென வண்டி மீது ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. மனைவி வண்டியை நிப்பாட்டுங்கள் என்ன என பார்க்கலாம் என்றார். நான் இல்லை நிப்பாட்ட வேண்டாம் என கூறி வீடு வந்து சேர்ந்தேன். கண்ணாடியை குறி வைத்து கல் எறிந்திருக்கிறார்கள். Metal body யில் dent வீழுந்திருக்கிறது என்றால். மிக அருகிலும் வலுவாகவும் எறிந்திருக்க வேண்டம். அவர்களின் நோக்கம் வண்டியை நிறுத்தி வழிப்பறி செய்வதாக இருக்கலாம். பெரிய குளம் , போடி போன்ற பகுதிகளில் அதிகாலையில் தனிநபர்களிடம் அதிக வழிப்பறி நடக்கிறது என்று தனிநபர் ஒருவர் பதிவிட்டு இருப்பது தேனி மற்றும் போடி சுற்றுவட்டாரத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.