Cinema

விஜயுடன் பயணிக்க ஆசை இல்லை... பிரபலம் சொன்ன பதில்!

Bala
Bala

தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவி செய்து வரும் நடிகர் பாலா, யாரிடமும் பணத்தை பெறாமலே தனது சொந்த உழைப்பு மூலம் கிடைத்த வருவாய் வைத்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். விஜய் அரசியல் குறித்தும் விஜய் உங்களுக்கு அரசியலில் பதவி கொடுத்தால் அவருடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருந்தால் கரம் கொடுப்பீர்களா என கேள்விக்கு தற்போது பாலா நச்சென்று ஒரு பதில் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் பாலா. சின்னத்திரையில் மக்களை சிரிக்க வைத்தவர் நிஜத்திலும் மக்களை தன்னால் முடிந்த உதவி செய்து சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கு தள்ளியுள்ளார் பாலா. சமீபத்தில் ஐந்து ஆம்புலன்ஸ் வழங்கியது மட்டுமில்லாமல் சென்னையில் இலவச ஆட்டோ ஒன்றை வழங்கி தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை மக்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கோடை வள்ளலாக இருந்து வருகிறார். கடைசியாக உதவி செய்தபோது தன்னை சிலர் சிக்கனலில் பிச்சை தான் எடுப்பீர்கள் இப்படியே உதவி செய்து வந்தால் அந்த நிலைமைக்கு தான் செல்விர்கள் என கூறினார்கள். ஆனால், பெரியதாக நான் எடுத்து கொள்ளவில்லை நான் பிச்சை எடுக்கும் சிக்கனலில் எனது ஆம்புலன்ஸ் கிராஸ் செய்து போனாலும் பரவாயில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 'யூத் ஆண்ட் இந்தியா என்ற தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் நகைச்சுவை நடிகரும் சின்னத்திரை நடிகரான பாலா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பாலா இதுவரை நான் ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறேன் வரும் நாட்களில் புதிய ஐந்து ஆம்புலன்ஸ் வாங்கி தருகிறேன் என கூறினார். விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு விஜய் எது செய்தாலும் யோசித்து தான் செய்வார். எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது என்னை பற்றி சிலர் அவதூறு செய்து வருகின்றனர். அங்கு செலவிடும் பணத்தை எனக்கு கொடுங்கள் நான் முதியோர் இல்லத்தில் மருந்து, மாத்திரை வாங்கி கொடுக்க உதவும் என கூறினார்.

தொடர்ந்து, விஜய் உங்களாய் அரசியலில் அழைத்தால் செல்வீர்களா? கேள்விக்கு அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் அளவிற்க்கு எனக்கு அறிவு இல்லை. பதவி ஆசை எல்லாம் இல்லை.  மக்களுடன் ஆதரவால் தான் நான் உதவி செய்துவருகிறேன். தொடர்ந்து 100% சதவீதம் சேவை மட்டுமே குறிக்கோள், அரசியல் நோக்கம் இல்லை அன்பின் ஏக்கம் மட்டுமே உள்ளது என தெரிவித்தார். பாலா யாருடைய பணத்தில் செலவு செய்கிறார் பெரியதாக படத்தில் ஏதும் நடிக்கவில்லை என கேள்வி எழுந்தபோது myv3 ads மூலம் சம்பாத்திக்கிறாரா அல்லது எங்கையாவது பினாமி மூலம் பணத்தை ஈட்டுகிறார் என கேள்வியை முன்வைத்து வருகின்றனர் இணையத்தில்.