![vijayadharani](https://www.tnnews24air.com/storage/gallery/bfGkIEhVY5lOonMzjAPFRNdC8XLLoKTjGTm9CAB1.jpg)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் மாற்று கட்சியினர் வேறு கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான விளவங்கோடு எம்.எல்ஏ பாஜகவில் இணைவதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பாஜகவில் ஐக்கியமானார் விஜயதரணி அவர் எதற்காக பாஜகவில் இணைந்தார் என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் எப்போதும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருவது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே. தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் முன்பை விட தற்போது அசுர வளர்ச்சி வளர காரணமே பாஜகவில் உள்ள தலைவர்கள் தான் காரணம் அதற்கான வேலைகளை திட்டமிட்டு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதே காரணம். ஒரு பக்கம் பாஜகவை மாநிலம் முழுக்க கொண்டு சேர்க்க மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்கி அதனை இறுதி கட்டத்துக்கு கொண்டுவந்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் பாஜகவின் திட்டங்களை கிராமப்புற மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாற்று கட்சியினர் பாஜகவில் தற்போது ஐக்கியமாகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் உட்பட சுமார் 14 பேர் பாஜகவின் டெல்லி தலைமையில் இணைந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நபரான விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணையலாம் என்று கடந்த சில காலமாகவே தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில்இணைந்து கொண்டார். விஜயதரணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜயதரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர். அவருக்கு தான் அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வரும் என கூறப்பட்ட நிலையில் செல்வ பெருந்தகைக்கு பதவி கொடுக்கப்பட்டதால் சில காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை காரணமாவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மாற்று கட்சியை தேடி வருவதாக தகவல் வெளியாகிறது. அதன் அடிப்படையில் விஜயதரணி பாஜக பக்கம் சென்றால் என இணையத்தில் பேசப்படுகிறது.
ஆனால், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "இன்று பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணியை நான் மனதார வரவேற்கிறேன். அவர் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியைச் சேர்ந்தவர். அவர் விளவங்கோடு தொகுதியில் இருந்து 3 முறை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். நமது தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்யப் பிரதமர் மோடி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுக்க உள்ள மக்கள் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே பல்வேறு தலைவர்களும் இப்போது பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரைக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சியை வலுப்படுத்த வருவோரை மனதார வரவேற்கிறேன் என கூறினார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது இந்த நிகழ்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பாஜகவில் இணைந்தது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் பாஜகவில் இணைந்ததற்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் நல திட்டங்களே மக்களை பாஜக பக்கம் திரும்பி பார்க்க உதவுவதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். விஜயதரணி பாஜக பக்கம் சென்றதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ALL THE BEST என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.