![priyamani,hindhimovies](https://www.tnnews24air.com/storage/gallery/pLlubfTSHzzuHwwuTorHF7lrXk0v659n6WPYicZp.jpg)
தமிழ் சினிமாவின் ஒரே ஒரு படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் பிரியாமணி. இவரது இயற்பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியாமணி தனது பள்ளி படிப்பு முடித்த பிறகு காஞ்சிபுரம் சில்க்ஸ், லட்சுமி சில்க்ஸ் மற்றும் ஈரோடு சில்க்ஸ் என பல அச்சு விளம்பரங்கள் ஷோரூம் களுக்கு மாடலிங் செய்து வந்தார்.
பிறகு 2006 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான ப்ரியாமணி இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார். இந்த படம் இவருக்கும் நடிகர் கார்த்திக்கும் முதல் படம் ஆனால் இருவருமே இந்த படத்தில் தங்கள் நடிப்பை அசத்திருப்பார்கள் காதலாக இருந்தாலும் சரி சண்டை காட்சிகளும் குடும்ப பிரச்சினைகளிலும் என அனைத்திலும் இருவரது நடிப்புமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. நடிகர் பிரியாமணிக்கு இந்த படத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முன்னதாக தெலுங்கில் 2003 ஆம் ஆண்டு எவரே அடகாடு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான பிரியாமணி 2009இல் ராம் 2010ல் ராவணன் மற்றும் சாருலதா ஆகிய படங்களில் நடித்தார்.
இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு மூன்று திரை உலகிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டுப்போட்ட பிரியாமணி 2019 ஆம் ஆண்டு தி ஃபேமிலி மேன் என்கின்ற ஹிந்தி ஓ டி டி தொடரின் மூலம் பாலிவுட்டிலும் அதிகரித்து அங்குள்ள மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரியாமணியின் நடிப்பு வரவேற்கத்தக்கது. இதற்கிடையில் பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ச்சி அமைப்பாளராக செயல்பட்டு வரும் முஸ்தபா ராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரியாமணி சமீபத்தில் பேட்டியில் கூறிய ஒரு கருத்து வைரல் ஆகி வருகிறது. அதாவது பிரபல நடிகை நடிகர்கள் திரை உலகை சேர்ந்தவர்கள் வெளியே செல்லும்போது விமான நிலையத்திற்கு செல்லும் பொழுதும் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதுமே கூடிக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்துமே அந்த குறிப்பிட்ட நடிகர் நடிகைகளுக்கு ஒரு நல்ல விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இப்படி நடிகர் நடிகைகளை குறிவைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பவர்களை பாப்ராஸ்ஸி என்று கூறுவார்கள். இது குறித்த தகவலையே பிரியாமணி தற்போது பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், பாலிவுட் நடிகை நடிகர்கள் ஏர்போர்ட், ஜிம், வாக்கிங் என எங்கு சென்றாலும் அவர்களை வளைத்து வளைத்து ஒரு கும்பல் புகைப்படத்தை எடுப்பார்கள். ஆனா என்னை யாருமே அப்படி புகைப்படம் எடுத்ததில்லை! இது குறித்து எனக்கு தெரிந்த ஒருவரிடம் நான் கேட்ட பொழுது அப்படி ஒரு கும்பல் நம்மை போட்டோ எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பாப்பராஸ்ஸிகளுக்கு பணம் கொடுத்து நாம் எங்கு செல்கிறோம் எந்த இடத்தில் எங்கு இருப்போம் என்ற தகவல்களை நாம் கொடுக்க வேண்டும் மேலும் பணத்தையும் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு நாம் செல்லும் இடங்களுக்கு வந்து புகைப்படத்தை எடுப்பார்கள் என கூறினார். இப்படி புகைப்படம் எடுப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தையே நான் அன்று தான் தெரிந்து கொண்டேன் அது தவறு என நான் கூறவில்லை ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரிந்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என கூறினார் பிரியாமணி!
பிரியாமணியின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் நாம் பார்க்கும் நடிகை நடிகர்களின் புகைப்படங்கள் அனைத்தும் இப்படி பணம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோகளா இதற்கும் செட்டப் செய்து ஒரு அணியை நியமித்திருக்கிறார்களா! என கமெண்டுகளை முன்வைக்கின்றனர் நெடிசன்கள்.