நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய குடியரசு தலைவர் 10 ஆண்டுகளில் 25கோடி ஏழை மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என சூளுரைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவித்த மோடி குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது. நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியா விடுதலை பெற்றபோது அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 10 ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது போல தற்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளீர்கள். பாராளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர். எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.
காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை. இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடக்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்? எதிர்க்கட்சிகளை திறம்பட வழிநடத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. சோம்பேறி தனது காங்கிரஷை யாரும் மிஞ்ச முடியாது. நிச்சயம் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெற்று 100 முதல் 125 நாட்களில் பாஜக ஆட்சியில் அமரும் என கூறினார்.
காங்கிரஸ் கட்சி தன் குடும்ப வளர்ச்சி மட்டுமே பார்த்துக்கொள்கிறது, மக்களை நினைவில் கொள்ளவில்லை. இந்த அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அடுத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உத்தேசித்து உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கே மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். குலாம் நபி ஆசாத் கட்சியே மாறிவிட்டார். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் கட்சியின் எல்லா பதவிகளிலும் இருப்பதே குடும்ப அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாக ஆவதை நான் வரவேற்கிறேன். வாரிசு மற்றும் குடும்ப அரசியல் காரணமாக தேசம் ஏராளமான துயரங்களை அனுபவித்துள்ளது. ஒரு குடும்பத்தின் அரசியல் தற்போது காணாமல் போய்விட்டது. மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் ரத்து செய் என்கிறது. என்று எதிர்க்கட்சியின் நிலமையை தெளிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை. நாட்டில் பணவீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பணவீக்கம் அதிகரித்துள்ளது என குற்றச்சாட்டு வைத்தார். ஐமுகூ ஆட்சியில் பணவீக்கம் என்பது இரட்டை இலக்கில் இருந்து என்பதை பிரதமர் இவ்வாறு பேசினார்.