24 special

மகாராஷ்டிரா பெண் செய்த காரியம்!!! மனிதன் படப் பாணியில் விபத்து!!

CAR ACCIDENT
CAR ACCIDENT

சென்னை அசோக் நகரில் வீட்டு விசேஷத்திற்காக உறவினர்கள் அனைவரும் வந்திருந்த நிலையில் இரவு தூங்குவதற்கு வீட்டில் இட பற்றாக்குறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு வெளியில் உள்ள வாசலில் படுத்திருந்தவர்கள் மீது வடமாநில பெண் சொகுசு காரினை ஏற்றி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இது தற்போது சென்னை அசோக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. ஏன் இந்த விபத்து ஏற்பட்டது?? இதற்கான காரணம் என்ன?? என்பதை விரிவாக பார்க்கலாம்!!சென்னை அசோக் நகர் பகுதியில் பத்தாவது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவர் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வெளியூரிலிருந்து வந்திருந்த நிலையில் இரவு வீட்டில் இட பற்றாக்குறை காரணமாக உறவினர்கள் சிலர் வீட்டின் வாசலில் உறங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர். மேலும் அவரின் வீடு முட்டு சந்தையில் இருப்பதால் வேறு எந்த வாகனங்களும் வரப்போவதில்லை என்று நினைத்து வாசலில் உறங்கிக் கொண்டு உள்ளனர்.


இந்த நிலையில் காலை நான்கு மணி அளவில் அந்த வழியில் மகாராஷ்டிரா பதிவின் கொண்ட சொகுசு கார் ஒன்று வீட்டு வாசலில் படுத்து இருப்பவர்களை கண்டு கொள்ளாமல் அவர்களின் கால் மீது ஏற்றி சென்று அதிலிருந்து தப்பிக்க காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சாலையானது முட்டு சந்தாக இருப்பதினால் வேறு வழி இன்றி காரை நிறுத்தியுள்ளார் அந்தப் பெண். இதனைத் தொடர்ந்து காலில் கார் ஏற்றப்பட்டவர்கள் வலியால் சத்தமிட அக்கம் பக்கம் இருப்பவர்கள் அந்தப் பெண்ணை  வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்தப் பெண் ஏன் இப்படி வானத்தை ஓட்டினார் என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தும் பொழுது இந்த காரை இயக்கிய பெண் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு 41 வயது என்பதும் அவரின் பெயர் வைஷாலி என்பதும் தெரியவந்தது.சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு google மேப்பினை பார்த்துக்கொண்டு அது காட்டும் பாதையில் வந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் இந்த சந்து முட்டு சந்தை என்பது எனக்கு தெரியாது என்றும் காவல்துறையிடம் வைஷாலி கூறியுள்ளார். இந்த விபத்தில் சரிதா முதல் கொண்டு நான்கு பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரிதா மற்றும் பிள்ளை நாயகி என்ற இருவருக்கும் காலில் உள்ள எலும்புகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காரை ஓட்டி வந்த  மகாராஷ்டிரா பெண்ணான வைஷாலி மது போதையில் ஏதும் இருந்தாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த செய்தியை பார்க்கும் பொழுது google மேப்பை நம்பி அது காட்டும் பாதையில் செல்பவர்கள் கொஞ்சம் உஷார் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த விபத்தானது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படத்தில் ஏற்படும் விபத்து போலவே உள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர். ஏனென்றால் அந்த திரைப்படத்திலும் சாலையோரம் படுத்திருப்பவர்கள் மீது  இது போல தான் கார் ஏற்றப்பட்டு விபத்து ஏற்படும். இதனால் பலர் அந்தத் திரைப்படத்தை வைத்து கூறி வருகின்றனர். மேலும் எப்போதும் google மேப்பை மட்டுமே முழுமையாக நம்பி எந்த ஒரு வழியிலும் செல்ல கூடாது என்பதற்கு இதுவே ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இந்த விபத்து தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!