
நம் முன்னோர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அவற்றை பின்பற்றினால் நம் வாழ்வின் பயணத்தில் ஒரு சரியான இடத்திற்கு சென்று விட முடியும். மேலும் செய்யக்கூடாத விஷயங்களை செய்தால் அவை ஏதாவது ஒரு கேடினை விளைவித்து விடும் என்றும் நாம் அறிந்திருப்போம். தெரியாமல் செய்யும் விஷயங்கள் கூட எதிர்காலத்தில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும் போது தான் இதனை செய்ததால் தான் இப்படி போன்று நடந்துள்ளது என்று நமக்கு தெரிய வரும்.உதாரணமாக மாலை 6 மணிக்கு மேல் தங்க நகைகளை கழட்டக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி கழற்றினால் பொன் பொருளின் சேர்க்கை போய்விடும் என்றும் அதன் பிறகு கஷ்டம் ஏற்படும் என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் உண்மையான காரணம் என்னவென்று பார்த்தால் முன்பெல்லாம் தற்போது நம்மிடம் உள்ள லைட் போன்ற வெளிச்சம் தரக்கூடிய பொருட்கள் எதுவும் இருந்திருக்காது. அவர்கள் வெறும் விளக்கினை மட்டுமே பயன்படுத்தி மாலை நேரத்தில் வெளிச்சத்தை உருவாக்கினர்.
அப்படி குறைந்த வெளிச்சத்தில் நகைகளை கழட்டும் பொழுது அதை எங்காவது தெரியாமல் விழுந்து விட்டால் அதைத் தேடுவது மிகவும் கஷ்டமாகிவிடும். இதற்காகத்தான் வகைகளை மாலை 6:00 மணிக்கு மேல் அதாவது சூரியன் மறைவிற்குப் பிறகு இருட்டாகி விடும் என்பதனால் நகைகளை கழட்டக்கூடாது என்று கூறியுள்ளனர். இவ்வாறு நம் முன்னோர்கள் பல விஷயங்களை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர். நமக்கு அவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று கேள்விகள் தோன்றும்!! ஆனால் அப்போது அவர்கள் இருந்த சூழ்நிலைக்கு ஏற்றது போல் அவர்கள் கூறியிருப்பது சரியாக இருந்தது. மேலும் அவர்கள் கூறியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் பல விஷயங்களில் அவை சரியானதாகவே தோன்றும். இது போல தான் தற்போது எந்தெந்த பொருட்களை எல்லாம் திருமணம் ஆன பெண்கள் அவர்களின் அம்மா வீடுகளில் இருந்து எடுத்து வரக்கூடாது என்று கூறியுள்ளார்!! இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்!!விறகினை எடுத்துட்டு வந்தால் வீட்டில் கண்டிப்பாக கஷ்டம் வரும் என்றும், தொடப்பம் கண்டிப்பாக எடுத்துட்டு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக கருவேப்பிலை தாய் வீட்டில் இருந்தால் அதனை கண்டிப்பாக பறித்து வரக்கூடாது. வரும் படித்து வந்தால் கணவனுக்கு நோய் ஏற்பட்டு ஆயுசு குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எலுமிச்சை பழம் கொண்டு வரக்கூடாது என்றும், சட்டி போன்ற சமைக்கும் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும் மற்றும் தீப்பெட்டி போன்றவை தாய் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரக்கூடாது. எந்த வகையான எண்ணெயாய் இருந்தாலும் கொண்டுவரக் கூடாது. ஜல்லடை போன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் சீயக்காய் போன்றவை அம்மா வீட்டில் இருந்து திருமணம் ஆன பெண்கள் கொண்டு வரவே கூடாது என்று அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியுள்ளார். என்னதான் உங்க அம்மாவிடம் இருந்தாலும் கூட அங்கே இருந்து ஒரு சில பொருட்களை கொண்டுவந்தால் குடும்பத்தில் கண்டிப்பாக கஷ்டம் ஏற்படும் என்றும், கணவரின் ஆயுள் குறையும் என்றும், மேலும் இதுபோன்று பொருட்களை எடுத்து வந்தால் கணவரை உடல் நிலையில் பலவகையான நோய்கள் ஏற்பட்டு அவருக்கு ஏதேனும் கேடு வந்துவிடும் என்று அந்த பெண் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இவ்வாறு இவர் எந்தெந்த பொருட்களை தாய் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரக்கூடாது என்று கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.