24 special

திமுக அரசு செய்த வேலை!

vijay. mkstalin
vijay. mkstalin

கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழக அரசியல் களம் மாறுபட்ட சூழ்நிலையையும் புது புது அரசியல் நுளைவுகளை கொண்டதாக இருந்தது. இதில் மிக முக்கிய கவனம் பெற்றது நடிகர் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அதிக ரசிகர் பட்டாளர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள் அனைத்துமே அரிசியில் குறித்த நடவடிக்கைகளாக இருந்தது முக்கிய தலைவர்களின் நினைவு மற்றும் பிறந்த நாளில் அவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பது மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்குவது சிற்றுண்டி வழங்குவது முட்டை பால் பிரட் போன்றவற்றை அவ்வப்போது வழங்கி மக்கள் மத்தியில் கவனத்தை பெற ஆரம்பித்தது விஜயின் மக்கள் இயக்கம். இதனை அடுத்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு வழங்கிய பாராட்டு விழாவை அதிரடியாக அறிவித்தார் விஜய், இதில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டியது திரைத்துறையை மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தின் கவனத்தையும் ஈர்த்தது.


இருப்பினும் அப்பொழுது நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருவது குறித்து கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்தார். அதே சமயத்தில் அவரது தந்தை சந்திரசேகர் கட்சி தொடங்குவது குறித்த பேச்சு வார்த்தையை தனது மகனிடம் பேசிய பொழுதும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுவது வதந்தியாக  இருந்து வந்த நிலையில் படிப்படியாக விஜய்யின் நகர்வுகள் அனைத்துமே அரசியல் நகர்வாக இருந்ததால் நிச்சயம் அரசியலுக்கு விஜய் வருவார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனை அடுத்து தேமுதிக தலைவரும் திரை பிரபலமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு தூண்டுதலாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு அடுத்தபடியாகவே குறுகிய காலத்தில் விஜய் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதை குறித்தும் அரசியல் கட்சியின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்பது விஜய்யின் அரசியல் கட்சி பெயராகும் விரைவில் அதன் கொடி கொள்கை என அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும் என்பதை விஜய் தனது கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

முன்னதாக விஜய் தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலே திமுகவால் பல சரிவுகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்து வந்தவர் இதனால் திமுகவிற்கும் விஜய்க்கும் என்றும் ஆகாது என்று பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளது திமுகவிற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதோடு விஜய் அரசியல் பிரவேசம் குறித்து திமுக ஆதரவாளர்களாக உள்ள சில youtube சேனல்கள் விமர்சனம் செய்வதையும் அவர் ஏன் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தார் தமிழ்நாடு என்று தானே வைக்க வேண்டும் என்ற  ஒரு புதிய கருத்துக்களை முன்வைத்து பிரச்சனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.இந்த நிலையில், தமிழகத்தின் பல தொகுதிகளில் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை வைத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் 20 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த செய்தி விஜய் தரப்பை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் அரசு தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் தன்னை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.