திடீரென்று மரணம் ஏற்பட்டு பலரும் இறந்து போவதை நம்மால் தற்பொழுது பார்க்க முடிகிறது. இவ்வாறு திடீர் மரணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதயத்திற்கு சென்று கொண்டிருக்கும் 3 இரத்த குழாய்களில் இதயத்திற்கு ரத்தம் செல்வது ஒரே நேரத்தில் அடைத்துவிட்டால் இதுபோன்று திடீர் மரணம் ஏற்பட்டு உயிர் இழந்து விடுகின்றனர். பொதுவாக மரணம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் வரக்கூடிய ஒன்றுதான். அனைவருமே ஒரு காலகட்டத்தில் மரணத்தை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இயல்பாக வயது மூப்பு காரணமாக மரணம் ஏற்படும், அல்லது விபத்து, தொடர்ந்து ஏதாவது ஒரு நோயால் அவதிப்பட்டு வருவதாலும் மரணம் ஏற்படும்.
மேலும் சிலர் இந்த பூமியில் வாழ்வதற்கு காரணமே இல்லாமல், வாழ்க்கை முழுக்க பிரச்சனை மட்டுமே இருப்பவர்கள் இதுவரை வாழ்ந்தது போதும் என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டு மரணத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் எந்த ஒரு நோயுமே இல்லாமல் தினசரி வாழ்க்கையை நன்றாக எதிர்கொண்டு வருபவர்கள் திடீரென்று இறந்து விடுகின்றனர். இவ்வாறு எந்த நோயும் இல்லாமல் இறந்து போகும் விஷயத்தை தான் திடீர் மரணம் என்று கூறுகின்றனர். முன்பெல்லாம் எங்கேயாவது ஓரிரு இடங்களில் மட்டும் தான் இது போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய காலங்களில் அடிக்கடி இது போன்று திடீர் மரணம் ஏற்படுவதை நாம் வீடியோவாகவே செய்திகளில் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக திருமண விழாக்களில் நடனமாடிக் கொண்டிருக்கும் இப்பொழுது திடீரென்று இறப்பு ஏற்படுவது, விளையாட்டு மைதானங்களில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று சுருண்டு விழுந்து இறந்து விடுகின்றனர். மேலும் ஜிம் போன்றவற்றில் ஒர்க் அவுட் செய்யும் நபர்களும் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே கீழே விழுந்து இறந்து விடுகின்றனர். இது போன்ற தொடர்ந்து பல இறப்புகள் பல்வேறு இடங்களில் நடப்பதை நாம் செய்திகளின் மூலம் அறிவதால் தற்போது திடீர் மரணம் என்பது இயல்பாகவே மாறிவிடும் ஒன்றாக இருக்கிறது. இது போல தற்பொழுது மீண்டும் ஒரு திடீர் மரணத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்!! அது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி திடீர் மரணத்தின் மீது இருக்கும் மச்சத்தினை இன்னும் கொஞ்சம் அதிகமாகி உள்ளது. இந்த மரணம் எங்கே ஏற்பட்டது??? எப்படி ஏற்பட்டது?? என்பது குறித்து விரிவாக காணலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு உள்ளனர். அப்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் பேட்டிங் செய்து கொண்டிருப்பவர் நன்றாக விளையாடிக் சிக்ஸர் அடித்து பந்தை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென்று அந்த இளைஞர் மயக்கம் அடைந்து கீழே விழுந்து விடுகிறார். அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று அவரை பார்ப்பதற்காக செல்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் அப்போதே இறந்து விடுகிறார். இதுபோன்று அந்த வீடியோவை காட்சிகள் அமைந்துள்ளது. இவ்வாறு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர் திடீரென்று கீழே விழுந்து உடனே மரணத்தை தழுவியது அங்கு இறந்தவர்களுக்கும் அப்பகுதியில் இருப்பவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக தானே விளையாடிக் கொண்டிருந்தார்!! எப்படி இவ்வாறு திடீரென்று இறந்து விட்டார் என அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ மற்றும் செய்திகள் இணையத்தில் வைரல் ஆவதை தொடர்ந்து பொதுமக்களும் திடீரென்று ஏற்படும் மரணத்தின் மீது அதிக அளவில் அச்சம் கொண்டு உள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்பொழுது அனைவரின் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தி வருகிறது!!