ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான , சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்று அம்மாநிலசட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது, அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு கட்டத்தில் சந்திரபாபு மனைவி குறித்து ஆளும் கட்சியினர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து இருதரப்பு இடையே வாக்குவாதம் அதிகமானது.
இதனால் வேதனையடைந்த சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி சத்தியம் செய்து அவரது கட்சியினர் உடன் வெளிநடப்பு செய்தார்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு தொடர்ந்து “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தான் பேசிக் கொண்டிருந்த போது ஆளும் கட்சியினர் தனது பேச்சை நாடகம் என விமர்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தனது கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இந்தக்காட்சிகள் நாடு முழுவதும் வேகமாக பரவிய நிலையில் சந்திரபாபுவின் செயலை சுட்டிக்காட்டி பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில்.,
அரசியலில் உயர்வு தாழ்வு எதார்த்தமான ஒன்று தான் ஆனால், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாய்விட்டு கண்ணை கசக்கிய சந்திரபாபு நாயுடு 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேச விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோருடன் கூட்டணி வைத்து செய்த அயோக்கியத்தனங்களை இன்றும் என் மனம் மறக்க மறுக்கிறது.
தனக்கு 2014-ஆம் ஆண்டு முதல்வர் பதவியை பிச்சைப்போட்ட பிரதமர் மோடியையே தனிப்பட்ட முறையில் குடும்பப்பெண்களின் பெயரை சொல்லி கொச்சைப்படுத்தியது முதல் அவரை தீவிரவாதி என அழைத்து தகாத வார்த்தைகளால் அர்ச்சித்த நன்றிகெட்ட மனிதன் தான் இந்த நாயுடு. இன்று கர்மவினையை அனுபவிக்கிறார். அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்கள், குறிப்பாக குடும்பப்பெண்கள் மீதான தாக்குதல் எப்போதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
அன்று பிரதமருக்கு நாயுடு செய்தார், இன்று நாயுடுவுக்கு ஜகன் கட்சி எம்.எல்.ஏ-க்கள் செய்கின்றனர். இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியவையே என எஸ் ஜி சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.