24 special

என்னது இப்படி ஒரு ஆட்டம் நடக்குதலா....? இணையத்தை கலக்கும் பலே ஆட்டம்...

sports , jallikattu
sports , jallikattu

தற்பொழுது பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு கோலாகல நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் தகுந்தாற்போல் ஜல்லிக்கட்டு முதல் ரேக்ளா ரேஸ் முதற்கொண்டு ஒவ்வொரு விளையாட்டுகள் பாரம்பரியமாகவும் அதே சமயத்தில் மக்கள் ஒன்று கூடி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் நிகழ்ச்சிகளாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இப்படி நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் அந்தப் போட்டிகளுக்கு கலந்து கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கி விழா ஏற்பாட்டாளர்கள் மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாக ஒருங்கிணைத்து மகிழ்ச்சிகரமாக மாற்றி விடுகின்றனர்.இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு போட்டியின் வீடியோ படு வைரல் ஆகி வருகிறது. சென்னையில் மயிலாப்பூரில் பல்லாங்குழி பிரீமியர் லீக் என்ற பெயரில் பல்லாங்குழி விளையாடும் விளையாட்டு நடந்தது. பொங்கலை முன்னிட்டு வீடியோவாக இணையத்தில் கடும் வைரலாக உலா வருகிறது, அந்த வீடியோவில் மயிலாப்பூரில் உள்ளவர்களும் டி நகரில் உள்ளவர்களும் கலந்து கொண்டு பல்லாங்குழி ஆடுகிறார்கள்.


அங்கு பரபரப்பாக சிறுவர் முதல் வயதானவர்கள் வரை ஆடி வருகிறார்கள். அது பரபரப்பாக இணையத்தில் வைரல் ஆகிறது. மேலும் பல்லாங்குழி ஜெயிப்பவர்கள் விவரங்கள் குறிக்கப்பட்ட உடனுக்குடன், அடுத்தடுத்த போட்டிகள் நடத்தப்படுகின்றன இப்படி பல்லாங்குழி பிரிமியர் லீக் விளையாட்டு வீடியோ இணையத்தில் வைரல் ஆவதை தொடர்ந்து இப்படிப்பட்ட பழைய விளையாட்டுக்கள் அதுவும் குறிப்பாக ஞாபக சக்தி மற்றும் சிறு கை விரல் கணக்குகளை கூர்மையாக்கும் விளையாட்டுகள் விளையாடுவது மூளைக்கும் சரி மனதிற்கும் சரி ஒரு புத்துணர்வை கொடுக்கும் இந்த மாதிரி விளையாட்டுகளை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது போன்ற பாசிட்டிவான விமர்சனங்களும் பதிவிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.இது மட்டுமல்லாமல் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ரேக்ளா ரேஸ் சேவல் விடும் பந்தயம் மோட்டார் சைக்கிள் பந்தயம் என பல நடைபெற்றாலும் இந்த பல்லாங்குழி வீடியோக்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் என்றால் ஐபிஎல், பிபிஎல் என்றால் பல்லாங்குழி பிரீமியர் லீக் எனவும் ஜாலி கமெண்ட்களை பறக்க விடுகின்றனர். அந்த வீடியோவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக பல்லாங்குழிகளை விளையாடுவதும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிலர் ஜாலியாக தமிழகம் முழுவதும் இந்த போட்டிகளை நடத்த வேண்டும் என ஜாலியாக கமெண்டுகள் பறக்க விடுகின்றனர்.