![santhanam](https://www.tnnews24air.com/storage/gallery/SAF16NqJ3MwThoEvHPGRG2WdB4q99JWkByWsyJ7l.jpg)
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக வருபவர் நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார் இந்த நிலையில் சந்தானம் வெளியிட்ட VIDEO ஒன்று தற்போது பெரியாரிஸ்ட்கள் மத்தியில் கதறலை உண்டாக்கியுள்ள நிலையில் சில பெரியாரிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்ககளும் சில சினிமா விமர்சகர்களும் சந்தானத்திற்கு எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் எந்த கதறலுக்கும் செவி சாய்க்காமல் சந்தானம் எடுத்த அதிரடி முடிவு மேலும் பலரை கதற செய்து இருக்கிறது.சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
சாமியே இல்லைனு ஊருக்குள்ள ஒருத்தன் சுத்திட்டு இருப்பானே அந்த ராமசாமி தானே நீ என இடம்பெற்ற வசனம் பலரை கதற செய்து இருக்கிறது. இது குறித்து முதலில் தனது கதறலை வெளிப்படுத்தி இருக்கிறார் பிஸ்மி: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சினிமா பல நேரங்களில் குப்பையைக் கூட கோபுரத்தில் ஏற்றுவிட்டுவிடும், அப்படி கோபுரத்தில் ஏற்றுவிடப்பட்ட ஒரு குப்பை தான் காமெடி நடிகர் சந்தானம். மக்கள் மத்தியில் பெயர் எடுத்த ஒரு நடிகரை குப்பை என்று சொல்லலாமா என்று நீங்கள் கேட்கலாம். நான் அப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சந்தானம், பொங்கல் வாழ்த்து தெரிவித்துவிட்டு நான் அந்த ராமசாமி இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் அப்படி சொன்னது தந்தை பெரியாரைத்தான்.சந்தானத்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் சந்தானத்தை கடுமையாக வசைப்பாடத் தொடங்கிவிட்டார்கள். இந்த ட்வீட்டுக்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்காத சந்தானம், அந்த பதிவினை டெலிட் செய்துவிட்டார்.
சந்தானம் நடித்து வரும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ப்ரோமோஷன் செய்த அவர், இந்த பதிவு மக்களை புண்படுத்திவிட்டது என்றால், அதற்கு வருத்தம் தெரிவிப்பது தான் அடிப்படையான பண்பு. ஆனால், எதிர்ப்புக்கு பயந்து அந்த பதிவை டெலிட் செய்த சந்தானம். இதுவரைக்கும் தனது செயலுக்கு வருத்தம் கேட்கவில்லை.பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளார்:அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரிலும், தந்தை பெரியாரை மோசமாக விமர்சனம் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில், இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டுட் திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று ஒருவர் கேட்க, அந்த ராமசாமி நான் இல்லை என்று பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த படத்தில் சந்தானம் பெரியாரை கடுமையாக விமர்சித்துள்ளது தெரியவருகிறது.நடிகர் என்பதை மறந்தார்: நடிகர் சந்தானம் திரைக்கு முன்னால் ஒரு காமெடி நடிகராக இருக்கலாம். ஆனால், திரைக்குபின்னால், சாதிய வன்மம் பிடித்த நபராக இருக்கிறார்.
இதற்கு உதாரணம் ஜெய்பீம் படம் வெளியான போது, வன்னியர்களை இழிப்படுத்துவது போல காட்சி இருக்கு என்று ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்ட போது, நான் ஒரு நடிகர் என்பதை மறந்து வன்னியராக கருத்து கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், இவர் ஜக்கி வாசுதேவின் சீடராக இருக்கிறார். இதை பல பேட்டியில் சொல்லிக் கொண்டு கொண்டு அவரின் தூதுவர் போல செயல்படுகிறார் என்று கதறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.யார் என்ன சொன்னாலும் திரைப்படம் திட்டமிட்ட நாளில் வெளியாகும் எனவும் படத்திற்கு இலவச ப்ரோமோஷன் கொடுத்த நபர்களை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சந்தானம்.வருவது வரட்டும் கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் இருக்கு கடவுளை ஒருமையில் பேசிய ராமசாமியை நடிகன் ஒருமையில் பேசுவது ஒன்றும் தவறு இல்லை என பலரும் சந்தானத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.