தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில், ரேசன் கடை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2022 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி, பட்டியலில் உள்ள 20 பொருட்கள் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும். மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசு தொகையை 5 ஆயிரமாக வழங்குவோம் என வாக்குறுதி அளித்து இருந்தனர் ஆனால் இந்த முறை பணம் கொடுக்காதது பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இந்த சூழலில் பொதுமக்கள் திமுக நிர்வாகியை எங்கே பொங்கல் பணம் போன முறை சொன்னீர்கள் எதற்கு பொய் சொன்னீர்கள் இந்த பையை வாங்கதான் காலையில் இருந்து டோக்கன் கொடுத்து நிற்க வைத்தீர்களா..? என திமுக துண்டு அணிந்திருந்தவர்களை வெளுத்து எடுத்துவிட்டனர் இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது வைரல் ஆகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது