Tamilnadu

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிவிட்டார்கள் என ஒப்பாரி வைத்தவர்கள் எங்கே? திமுக அமைச்சர் செயலால் காற்றில் பறந்த மானம் !

Credit - fb
Credit - fb

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிவிட்டார்கள், திருவள்ளுவரை காவி நிறத்திற்கு மாற்றிவிட்டார்கள் என தமிழக ஊடகங்கள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை மிக பெரிய செய்தியை போன்று உருவகம் செய்து பேசினார்கள் இந்த நிலையில் அவற்றை எல்லாம் ஓரம் கட்டும் வகையில் அரசியல் சாசனத்தையே கேள்வி குறி ஆக்கும் விதமான ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.


திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: மிகவும் மோசமான முன்னுதாரணத்தை, திருச்சி கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார். மீட்டிங் நடத்த வேறு இடமே இல்லையா? அமைச்சர் அழைத்தால் கூட, கட்சி அலுவலகத்தில் நடக்கிறது; வர முடியாது' என, கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் தவிர்த்து இருக்கலாம்.

ஆனால், எந்த நோக்கத்தில் சென்றனர் என தெரியவில்லை. சீனியர் அமைச்சர் நேரு கூட, தன் கட்சி அலுவலகத்துக்கு எந்த அரசு அதிகாரியையும் ஆலோசனைக்கு அழைத்ததில்லை. எதிர்காலத்தில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் கட்சி அலுவலகத்துக்கு அரசு உயர் அதிகாரிகளை வரவழைத்து பேசக்கூடிய முன்னுதாரணத்தை, இந்த அதிகாரிகள் ஏற்படுத்தி விட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கொரோனா ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி நடத்தினால் திமுகவும், அதன் ஆதரவு முன் கள பனையாளர்களும் இப்படித்தான் இருப்பார்களா? தமிழகத்தின் மரபு, அரசியல் சாசனம் என அனைத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்து வருகின்றனர்.

நிதி நிலையை சீர் செய்யும் இடத்தில் உள்ள தமிழக நிதி அமைச்சர் PTR தியாகராஜன் ஜக்கி வாசுதேவுடன் சண்டை போட்டு கொண்டு உள்ளார், சுகாதாரத்துறை அமைச்சர் ரெம்டேசிவர் மருந்து தண்ணீருக்கு சமம் என்கிறார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாநகராட்சி பணியாளர்கள் மீது பாய்கிறார்.

தற்போது அந்த வரிசையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு அதிகாரிகளை கட்சி அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடத்தி தமிழகத்தின் மீது தீராத களங்கத்தை உண்டாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது, இப்படி கண்ணுக்கு எதிரே தவறுகள் நடந்து கொண்டு இருக்க முன் கள பணியாளர்கள் வாய் மூடி வேடிக்கை பார்ப்பது அவர்கள் முன் கள பணியாளர்களா? இல்லை முக பணியாளர்களா என்று கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளது.