பல தடையை மீறி சாதித்தது இந்தியா! இந்திய மக்கள் கொண்டாடும் தகவல் உறுதியானதுPm modi
Pm modi

ஐரோப்பா, அமெரிக்கா & மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது, இந்தியா ஆம் சொந்த தயாரிப்பில் தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா, இப்போது கொரோனவை குணப்படுத்த புதிய மருந்தையும் கண்டறிந்து உள்ளது.

2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (* 2-டிஜி *) என்ற மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நெருக்கடியால் தங்கள் தடுப்பூசிகள் மூலம் சம்பாதிக்க நினைத்த 1.25 டிரில்லியன் டாலர்கள் விற்பனையை இந்தியா சுக்கு நூறாக உடைத்து விட்டது.அதிக மக்கள் தொகை உடைய இந்தியாவில், அவர்களின் தடுப்பூசியினை அதிக லாபத்தில் விற்பனை செய்ய நினைத்தவர்களுக்கு ஏற்கனவே,இந்தியா  சொந்த தடுப்பூசி  கண்டுபிடித்து அதை பல நாடுகளுக்கும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து அவர்களின் நம்பிக்கையில் மண் அள்ளி தெளித்தது.  

இப்போது, ​​இந்தியா மீண்டும் ஒரு முறை மேற்கத்திய நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இது 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ்  எனப்படும் கோவிட் எதிர்ப்பு மருந்து.  டி.ஆர்.டி.ஓ உடன் இணைந்த நிறுவனமான ஐ.என்.எம்.ஏ.எஸ் [இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் & அலையட் சயின்சஸ்] அவசரகால சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய  கோவிட் எதிர்ப்பு மருந்தை வெற்றிகரமாக வெளியிட்டது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் [டி.சி.ஜி.ஐ] இன்று  கோவிட் எதிர்ப்பு மருந்தை அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்த அனுமதி வழங்கினார்.   இது தடுப்பூசி அல்ல, மருந்து  தடுப்பூசி என்பது கொரோனோ தொற்றை தடுக்கும் வல்லமை கொண்டவை. கோவிட் எதிர்ப்பு மருந்து என்பது கொரோனோவை குணப்படுத்தக்கூடியது.

INMAS கண்டுபிடித்த கோவிட் எதிர்ப்பு மருந்து மருத்துவமனையில் உள்ள கோவிட் நோயாளிகளை முக்கியமாக ஆக்ஸிஜனை தேவை உள்ளோரை குணப்படுத்தக்கூடியது. இது ஒரு பெரிய சாதனை, மேலும், இது கோவிட் நோயாளிகளை விரைவில் குணமடைய உதவுகிறது.

ஐ.என்.எம்.ஏ.எஸ் ஹைதராபாத்தில் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்துடன் இணைந்து [சி.சி.எம்.பி] ஏப்ரல் 2020 இல் சோதனைகளை தொடங்கியது விஞ்ஞானிகள் குழு. கண்டுபிடித்த இந்த மூலக்கூறு கோவிட்டை திறம்பட சமாளிப்பது மட்டுமல்லாமல், கோவிட் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது - முதல் கட்ட மருத்துவ சோதனையில் கண்டறிந்தனர்.


மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு [சி.டி.எஸ்.கோ] மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் [டி.சி.ஜி.ஐ] ஆகியோர் மே 2020 இல் கட்டம் -2 சோதனைகளுக்கு கூட்டாக அனுமதி வழங்கினர்,மே முதல் அக்டோபர் 2020 வரை: டிஆர்டிஓவுடன், இணைந்த நிறுவனமான டிஆர்எல் [டிஃபென்ஸ் ரீசெர்ச் ஆய்வகம்] ஒன்றாக முதல் கட்ட கள அளவிலான தேர்வுகளை நடத்தத் தொடங்கியது.  இந்த சோதனைகள் கோவிட் நோயாளிகளுக்கு எவ்வளவு டோஸ் கொடுத்த பிறகு நோயாளி எவ்வாறு ரெஸ்பான்ட் பண்ணுகிறார் என்பதற்கான சோதனைகளை நடத்தியது.   எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் மருந்து நன்றாக வேலை செய்தது மற்றும் நோயாளி விரைவாக குணமடைந்தார்.  

அடுத்த கட்ட 2 ஏ-க்கு அனுமதி கிடைத்தது, இந்தியாவில் 11 மருத்துவமனைகளில் 110 கோவிட் நோயாளிகளிடம் நடந்த அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. கட்டம் 3 மருத்துவ பரிசோதனைகள்: டெல்லி, உ.பி., வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா 220 கொரோனா நோயாளிகளுக்கு நவம்பர் - மார்ச் 2021 இல் 3 வது கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி.  எல்லா நிகழ்வுகளிலும் சிறந்த முடிவுகள்.

கோவிட் எதிர்ப்பு மருந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் வெற்றி கண்ட பின்னர், அவற்றின் தரவை பகுப்பாய்வு செய்த பின் இன்று அவசரமாக மக்கள் உபயோகிக்கதிற்கு அனுமதி  தரப்பட்டுள்ளது அதனால் சொந்த தடுப்பூசியுடன், அவசரகால பயன்பாட்டிற்கு ஒரு மருந்து கிடைத்துள்ளது.

இதுவரை மேற்கத்திய நாடுகளிலும் நம் நாட்டிலும் ரெமிடிசிவரைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு இனி அந்த மருந்து தேவையில்லை.  இந்திய அரசின் முயற்சிக்கு பல கட்டங்களில் தடை ஏற்படுத்த திட்டமிட்டவர்களுக்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் முயற்சித்தவர்களுக்கு இது கசப்பான செய்தி,ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்களைத் தடுத்தவர்களுக்கும் கசப்பான செய்தி.  

இன்று முதல், கோவிட் எதிர்ப்பு மருந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருத்துவரின் மேற்பார்வையின் கீழ்  மருத்துவமனைகளில் உபயோகத்திற்கு வந்துள்ளது. இனி வென்டிலேட்டர்களின் தேவை படிப்படியாக குறையும். மோடி ஜி மவுனமாக இருப்பதாக கூறி கொண்டிருந்தவர்களுக்கு , இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் இதுதான்.  டிஆர்டிஓ, ஐஎன்ஏஎஸ், சிசிஎம்பி ஆகியவற்றின் கடின உழைப்பு 2020 மே முதல் பிரதமர் கேட்டுக் கொண்டதின் பேரில் நம் விஞ்ஞானிகள் வியத்தகு சாதனை புரிந்துள்ளனர். லாக் டெளன் இருந்தபோதிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு 

ஆன்டி-கோவிட் மருந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து உதவியுள்ளார்கள்.எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை முறியடித்து முன்னேறும் குணம் இந்தியர்கள் மத்தியில் இருப்பதால், உடனடியாக இந்த சாதனைகள் மேற்கொள்ள படுவதாகவும் விரைவில் உலகம் முழுவதும் இந்தியாவின் மருந்தை வாங்க வரிசையில் நிற்கும் எனவும் கூறப்படுகிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out