சவுக்கு சங்கர் சமூக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது, இந்த சூழலில் இந்திய அரசாங்கம் உத்தரவை அடுத்து சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது, தற்போதைய சூழலில் சவுக்கு சங்கரின் சமூக வலைத்தளம் பக்கத்தை முடக்கியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் தொடர்ச்சியாக பிரதமர், முதல்வர் மற்றும் பிரபலங்களை ஒருமையில் சவுக்கு சங்கர் தரக்குறைவாக அவரது ட்விட்டர் பக்கத்திக் விமர்சனம் செய்துள்ளார், இந்த சூழலில் அவர் மீது தனிப்பட்ட நபர்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ட்விட்டர் நிர்வாகம் எடுத்தது கிடையாது.
இதையடுத்து சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் சந்தியா சவுக்கு சங்கர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்து இருந்தார், அதற்கு நேரில் ஆஜராகுமாரு ஆணையம் சம்மன் அனுப்பியது, அதிலும் சவுக்கு சங்கர் கலந்து கொள்ளவில்லை, இந்த சூழலில்தான் சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் கடந்த காலங்களில் விமர்சனம் மற்றும் தவறான முறையில் கருத்துக்களை பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது, இதையடுத்தே அனைத்தையும் ஆராய்ந்து சவுக்கு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் திருமுருகன் காந்தி மற்றும் அவரது இயக்கத்தை சேர்ந்த பலரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்கள் முடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில் அதனை மீட்பதற்கு சவுக்கு சங்கர் முயன்று வருவதாக கூறப்படும் நிலையில் பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் சவுக்கு சங்கர் வரும் காலங்களில் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.