24 special

முதலில் அமீர் இதற்கடுத்து சிக்கப் போவது யார் யார்?

AMEER , SADHANANTHAN
AMEER , SADHANANTHAN

ஒட்டு மொத்த தமிழகத்தயுமே உலுக்கிய சம்பவமாக கடந்த சில நாட்களாக பார்க்கப்படுவது போதைப்பொருள் கடத்தல் விவகாரம்! உணவுப் பொருள்களில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கலந்து ஆஸ்திரேலியா மலேசியா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு  கடத்தி வந்துள்ள கும்பல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் பிடிபட்டது, அவர்களிடம் மேற்கொண்டு விசாரணையில் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த அதுவும் சென்னையில் வசித்து வரும் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் தான் தங்களின் கடத்தல் கும்பலின் தலைவன் என்று வாக்குமூலம் அளித்ததை அடுத்து, ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்க துறையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் சம்மன் அனுப்பியது ஆனால் ஜாபர் சாதிக் தலைமறைவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 


அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார் என்பதும் அவர் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக இருந்து உள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் பல போலி பாஸ்போர்ட்டுகளையும் சிசிடிவி கேமரா காட்சிக்களையும் கைப்பற்றியது அந்த போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பதையும் அவருடன் சில அரசியல்வாதிகள் சென்று வந்துள்ளனர் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அடிக்கடி ஜாஃபர் வீட்டிற்கு வந்து சென்றதும் அவர்கள் செல்லும் பொழுது கையில் ஏதோ ஒன்றை எடுத்துச் சொல்வதையும் அதிகாரிகள் கவனித்து ஜாபருடன் நெருங்கிய தொடர்பு இருந்த சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை தனது விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வந்தது. 

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த சமயத்தில் ஜாபருடன் தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான அமீர் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது சமூக வலைதளம் முழுவதும் வைரலானது அது மட்டும் இன்றி அமீர் தற்போது எடுத்து வந்த படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும் இதைத் தவிர கடந்த சில வருடங்களாகவே அமீர் ஜாபர் சாதித்துடன் அதிக நெருக்கம் காட்டி வந்துள்ளார் இருவரும் சேர்ந்து பல தொழில்களை மேற்கொண்டு உள்ளனர் என்பதும் அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. இதனால் அமீர் குறித்த பல வகையான கருத்துக்கள் ஆங்காங்கே கிசுகிசுக்கப்பட்டதை அடுத்து இயக்குனர் அமீர் ஜாபருக்கும் தனக்கும் தயாரிப்பாளர் இயக்குனர் என்பதை தாண்டி வேறு எந்த உறவும் கிடையாது என கூறி வந்தார். மேலும் அவருடன் எனக்கு எந்த வித வியாபார தொடர்பும் கிடையாது வேண்டுமென்றால் அதிகாரிகள் என்னை விசாரணை அழைத்தால் நான் அதற்கு கட்டுப்பட்டு எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என கூறி இருந்தார். 

இருப்பினும் அமீர் மற்றும் ஜாபர் இருவருக்கும் இடையேயான வியாபார தொடர்புகள் அமீரும் ஜாபரும் சேர்ந்து நடத்திய சில நிறுவனங்கள் மற்றும் தொடங்கிய சில கடைகள் என அனைத்தையும் விவரம் தெரிந்த பல அரசியல் விமர்சகர்கள் பத்திரிகை நிறுவனங்கள் வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இதனை அடுத்து ஜாபர் சாதிக்கும் சமீபத்தில் பிடிபட்டார், மேலும் அவர் வாக்குமூலம் வழங்குவதை உறுதி செய்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருளை கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டு தனது நெருங்கிய கூட்டாளியான சதானந்தத்தை குறித்து கூறினார். இதனால்.சதாவை அதிகாரிகள் கைது செய்து சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தத்தின் போதை பொருள் கடத்தலின் குடோனாக இயங்கி வந்த பகுதியையும் கண்டறிந்து அங்கும் தங்கள் சோதனைகளை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

இதனை அடுத்து ஜாபர் சாதித்துடன் தொடர்புடைய சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலரை டெல்லி போலீசார் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதில் முதல் ஆளாக டெல்லி போலீஸ்சார் ஜாபர் சாதிக்கின் வழக்கில் விசாரிப்பதற்கு இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பியுள்ளது! வருகின்ற இரண்டாம் தேதி நேரல் ஆஜராக வேண்டுமென்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அமீருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் தற்போது அரசியல் வட்டாரத்தையும் சினிமா வட்டாரத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.