Tamilnadu

தமிழச்சி தங்கபாண்டியனை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் ஒருமையில் திட்டியது யாரை?

avadi nasar speech
avadi nasar speech

சமூக வலைத்தளங்களில் பால்வளத்துறை அமைச்சர் ஒருவரை யோவ் ஒழுங்கா கீழே உட்காரு என ஆவேசமாக மிரட்டும் வீடியோ படு வைரலாக பரவி வருகிறது,


உவமைக் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(23/10/2021) காலை சென்னை - அசோக் நகர், மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள அவரது உருவ சிலை முன்பு, அவரது உருவ படத்திற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக சட்டமன்ற நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க அமைச்சர் மா சுப்பிரமணியம் தயாராகி கொண்டு இருந்தார் இந்த சூழலில்தால் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க மைக்கை நீட்டிய நிலையில் அது பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீது பட்டுள்ளது, இதனால் கோவம் அடைந்த அவர் கீழே உட்காருங்களே.., யோவ் கீழே உட்காரு..சொல்றோம்ல உக்காரு.. மைக்கு வெளில போயிரு என கையை நீட்டி மிரட்டும் காட்சி பரவி வருகிறது, அமைச்சர் இவ்வாறு பத்திரிகையாளர்களை நோக்கி ஒருமையில் பேசிய சம்பவம் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

மேலும் அண்ணாமலை தனியார் ஊடகம் ஒன்றன் பெயரை சொன்னதற்கே அண்ணாமலை நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என கோஷம் போட்ட பத்திரிகையாளர்கள் இப்போது அமைச்சர் ஒருவர் பொது நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை யோவ் வா போ.. என ஒருமையில் பேசியதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன் அமைச்சர் மாசுப்ரமணியன் ஆகியோரும் செய்தியாளர்களை நோக்கி பாய்ந்த அமைச்சரின் செயலை பார்த்து அமைதி காத்ததும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.