நாங்கள் வீழ்வது இது முதல்முறையல்ல ஆனால்.... சற்றுமுன் தமிழக டிஜிபி போட்ட உருக்கமான பதிவு!sylendra babu ips
sylendra babu ips

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில்.,வீரமரணம் அடைந்த உதவி ஆய்வாளர் பூமிநாதனின் மனைவிக்கு ஆறுதல் கூற முடியவில்லை.

சமூக விரோதிகளால் நாங்கள் வீழ்ந்தது  புதிதல்ல  ஆனால் நாங்கள் மிகவும் நேசிக்கும் சிறார்களே இந்த பாதகச் செயலைச் செய்தார்கள் என்பதை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. Tribute to the brave soldier SSI Boominathan, and our deep condolences to the bereaved family. என சரியாக 8.13PM குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அவரது பதிவிற்கு கீழே பலரும் உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தான் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பீர்கள் என உங்கள் மீது நம்பிக்கை உள்ளது.

சமூக விரோதிகள் பயம்கொள்ளும் அளவிற்கு உறுதியான நடவடிக்கை எடுங்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட SSI குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திரபாபு உண்மையான குற்றவாளிகள் கைது செய்யபட்ட மூவரும் என்பது உறுதிதான் எனவும் சந்தேகம் இல்லை எனவும் தெரிவித்தார்.மேலும் இனி ரோந்து செல்லும் காவலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் சுடவும் தயங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டிஜிபி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பாலியல் ரீதியான புகார்கள் தற்கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தலை தூக்க தொடங்கியுள்ள சூழலில் என்ன நடவடிக்கை காவல்துறை சார்பில் எடுக்க போகிறது என்பதே பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out