24 special

யார் யாருடைய கேரக்டர் நடிப்பது!! நீட் எதிர்ப்பிற்கு மேடையிலேயே ஆள் சேர்த்த சினிமா பிரபலம்!! ... வைரலாகும் திருச்சி சாதனா குறித்த சர்ச்சை!

SATHANA, NEET EXAM
SATHANA, NEET EXAM

டிக் டாக் மூலம் அதிக அளவில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா, திவ்யாவிற்கு அடுத்தபடியாக மக்களிடம் பிரபலமாக இருந்தவர் திருச்சி சாதனா. இவர் டிக் டாக் மூலம் தன்னிடம் இருந்த நடிப்பு திறமையையும் டான்ஸ் மற்றும் பாடல் போன்ற பல திறமைகளை வெளிக்காட்டினார், இது பலரையும் வியக்க வைத்தது. ஆனால் டிக் டாக் முடக்கப்பட்டதற்கு பிறகு என்ன செய்வதென்று யோசித்த திருச்சி சாதனா யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தார். இதன் மூலம் தற்போது அவருக்கு அதிக சப்ஸ்கிரைப்களும் உள்ளனர். அந்த யூடியூப் சேனலில் பல நேரங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவிட்டு பெரும் புகார்களிலும் சிக்கி வருகிறார். அதாவது காட்டுக்குள் அவர் செய்த சில சேட்டைகளையும் வீடியோவாக வெளியிட்டார். மேலும் பம்பு செட்டில் குளித்து முடித்து அதனையும் வீடியோவாக வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

மேலும் ஆபாசமான பல வீடியோக்களையும் செய்கைகளையும் பேச்சுக்களையும் இவர் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் இவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என பல புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் இவர் பதிவிடும் வீடியோக்களை பார்த்து சைபர் கிரைம் கையை கட்டி உள்ளதா என இவருக்கு எதிரான பல புகார்களும் கமெண்ட்களும் இன்னும் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டு தான் உள்ளது. 
இந்த நிலையில் அறம் செய் என்ற திரைப்படத்தில் திருச்சி சாதனா நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழா  மேடையிலேயே குணா திருச்சி சாதனாவை பங்கமாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது பாலு எஸ் வைத்தியநாதன் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் அறம் செய் இந்த படத்தில் ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன் மற்றும் திருச்சி சாதனா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் திருச்சி சாதனம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அதில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திருச்சி சாதனாவே இந்த இசை வெளியீட்டு விழாவில் கூறியது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.ஏனென்றால் ஒரு இரும்பு பெண்மணி, முன்னாள் முதல்வர் என பல சிறப்புகளைக் கொண்ட ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனாவா? யார் யார் எந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லையா? என இணைவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட குணா, இந்த நேரத்தில் நான் என்னுடைய உணர்வுகளை பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். அந்த காலத்தில் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றால் கூட கணவரை திரும்ப சொல்வார்கள்.

ஆனால் இன்று அனைத்துமே யூடியூபில் வெளியாகிறது. அப்படிப்பட்ட காலமாக மாறி உள்ளது. திருச்சி சாதனாவும் தனது யூடியூப்பில் பல பாலோவர்சை பெற்றிருக்கிறார். மேலும் அவரது கிராமத்தில் மிகப்பெரிய வீட்டையும் கட்டி உள்ளார். வயலில் குளித்துவிட்டு ஓப்பனாக வீடியோ பதிவிடுகிறார். அது அவருடைய சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் இது போன்ற வீடியோ வெளியிடுவதற்கு பதிலாக நீட் தேர்வு குறித்து வீடியோ பதிவிடலாமே என பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ஏற்கனவே நீட் எதிர்ப்பிற்கு திமுக நடத்தும் போலி போராட்டங்கள் பத்தாதா இதில் திருச்சி சாதனாகவும் இதனை கையில் எடுக்க வேண்டுமா? என ஒரு சிலரும், ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் அவருக்கு இதுகுறித்து என்ன தெரியும் என்று மற்ற சிலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீட் எதிர்ப்பிற்கு ஆள் பத்தவில்லை என இந்த குணா திருச்சி சாதனாவையும் சேர்க்கிறார் பாருங்க என விமர்சனங்களும் எழுந்து வருகிறது.