24 special

உடல் முழுக்க இத்தனை நாகங்களை கொண்ட கருட பகவானா!!! எப்பேர்ப்பட்ட நாக தோஷத்தையும் நீக்கிவிடும் அற்புத கோவில்!!

KARUDAN TEMPLE
KARUDAN TEMPLE

ராசியில் நாகதோஷம் வைத்துக்கொண்டு வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருபவர்களுக்கு தீர்வு சொல்லக்கூடிய வகையிலும், அவற்றை சரி செய்யும் வகையிலும்  தமிழ்நாட்டுக்குள் ஒரு அதிசயமான கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. அந்தக் கோவிலானது சென்னை கல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் ஊரில் அருள்மிகு மலைமண்டல பெருமாள் திருக்கோவில் ஆகும். இந்தக் கோவிலில் தான் எப்படிப்பட்ட நாகதோஷமாக இருந்தாலும் சரி அவற்றை சரி செய்யும் வகையில் பல ஆச்சரியங்களை உணர்த்தி வரும் அளவிற்கு அமைந்துள்ளது. கோவிலில் அமைந்திருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி,  பூதேவி ஆகிய இருவருடன் இணைந்து மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றார். மேலும் இந்த திருத்தலத்தில் புஷ்பாஞ்சலி ஆஞ்சநேயர் மற்றும் மிகவும் கலைநயம் மிகுந்த காருண்யம் மிகுந்த விஜயநகர காலத்திலேயே  துவக்கப்பட்ட பஞ்சலோக ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. மேலும் வேறு எங்கும் இல்லாத வண்ணம் அனுமன் கையில் புஷ்பம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.


விஜயநகர பேரரசுடன் தொடர்புடைய இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகவும் சக்தி வாய்ந்த கோவிலாகவும் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சன்னதியின் விளக்கமானது சிற்பக்கலை வாய்ந்ததாகவும் அதிக மகிமை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இதைவிட சிறப்பாக இங்கு எதற்காக நாக தோஷம் உள்ள பக்தர்கள் வந்து சென்றால் உடனடியாக நாகதோஷம் நீங்குகிறது என்று குறிப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரே காரணம் இங்கு அமைந்திருக்கும் கருட பகவான் தான்!! வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இக்கோவிலில் அமைந்திருக்கும் கருட பகவான் கலையில் ஒரு நாகத் திணையும், எனது இரு காதுகளில் ஒவ்வொரு நாகத்தினையும், மார்பில் இரண்டு மாலையாக இரு நாகத்திணையும், இரண்டு தோள்களிலும் ஒவ்வொரு நாகத்தினையும், இடுப்பில் அரைஞான்  கயிறாக ஒரு நாகத்தினையும் என்ற வகையில் மொத்தம் தனது உடல் முழுக்க எட்டு நாகத்தினை ஆபரணமாக கொண்டு அமைந்திருக்கிறார். 

எனவே இங்கு அமைந்திருக்கும் கருட பகவானை அஷ்டநாக கருடன் என்று அழைக்கின்றனர். இந்த அளவிற்கு நாகத்தினை மட்டுமே ஆபரணமாக அணிந்து கொண்ட கருட பகவான் உலகில் வேறு எங்கிலும் இல்லை என்றும், இக்கோவிலில் அமைந்திருக்கும் பகவானே மிகவும் சிறப்பானவர் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் இங்கு வந்து வேண்டி செல்பவர்களுக்கு அவர்கள் நினைக்கும் காரியம் விரைவில் நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த கோவிலாக இது அந்தப் பகுதியில் திகழ்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எத்தகைய சகலவித சர்ப தோஷம் இருப்பவர்களும் இந்த கோவிலுக்கு வந்து இங்கு அமைந்திருக்கும் கருட பகவானே வழிபட்டு சென்றால் அவர்களுக்கு இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சர்ப தோசத்தினால் திருமணம் ஆகாமல் நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் இந்த கோவிலுக்கு வந்து சென்றால் அவர்களின் திருமண தடையானது நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதினால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பல காரணங்களால் பிரிந்த தம்பதிகள் கூட இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதினால் மீண்டும் சேர்கின்றனர். வேண்டியது நிறைவேறியவுடன் நன்றி சொல்லும் விதமாக கருடனுக்கு நெய் விளக்கேற்றி அபிஷேகம் செய்து அவருக்கு மிகவும் பிடித்த அமிர்த கலசம் என்ற கொழுக்கட்டையும் படைத்து செல்கின்றனர்.