Tamilnadu

அதிபர் புடின் பிரதமர் "மோடியின் பேச்சை" கேட்பது ஏன் எழுத்தாளர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !

modi and putin
modi and putin

பிரதமர் மோடியின் முயற்சி குறித்து நெகிழ்ச்சியாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் அது பின்வருமாறு :-


இந்திய பிரதமர் மோடி சாமான்யர் அல்ல அவர் வீரசிவாஜியின் அவதாரம், சிவாஜி அக்காலத்தில் பிஜப்பூர் மொகலாயம் என இரும்பெரும் வல்லரசுகளை சமாளிப்பது போல இன்றும் சர்வதேச அரங்கில் சாதுர்யமாக நாட்டை நடத்தும் பெரும் ராஜதந்திரி

அந்த மோடி உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார், ஆனால் சிக்கல் இந்தியர்கள் உக்ரைன் தலைநகர் கீவில் மட்டுமல்ல எராளமான நகரங்களில் இருக்கின்றார்கள் அதில் முக்கியமானது கார்கிவ் நகரம்

இந்த நகரம் உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள பெரிய நகரம் முன்பே ரஷ்ய குறி இங்குதான் வைக்கபட்டது, மிகபெரிய தொழில்வாய்ப்புள்ள இந்நகரில் ஏராளமான இந்தியர்கள் படித்து வந்தனர், தலைநகர் உக்ரைனை அடித்து ஒரு பரபரப்பினை செய்த ரஷ்யா இப்பொழுது வியூகத்தை மாற்றி எல்லையில் இருந்து முன்னேறி உள்ளே செல்ல முயல்கின்றது அதில்தான் கார்கிவ் நகர் ரஷ்ய படைகளால் சுற்றிவளைக்கபட்டது.

நிலமையின் விபரீதம் மோடிக்கு தெரிவிக்கபட்டது, மோடி நேரடியாக புட்டீனை தொடர்பு கொண்டு விளக்கினார், மோடியின் செல்வாக்கு எத்தகையது என்பதை முதன் முதலில் நேற்று உலகுக்கு சொன்னார் புட்டீன், ஆம் ஆனானபட்ட பிடனையே கண்டுகொள்ளாத புட்டீன்

நேற்று மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகை, "மோடியின் கோரிக்கையினை ஏற்று கார்கோவ் நகரில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற அதிபர் புட்டீன் நேரடியாக‌ உத்தரவிட்டுள்ளார்" என தகவல் தெரிவித்துள்ளது, யாருக்குமே அடங்காத அந்த ரஷ்ய கரடி மோடியின் குரலுக்கு கட்டுபடுகின்றது.

உலக அரங்கில் இது மிகபெரிய திருப்பமாகவும் சில இடங்களில் அதிர்ச்சியாகவும் பல இடங்களில் வரவேற்பும் பெறுகின்றது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் மதிக்கபடும் இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடி உக்ரைன் விவகாரத்தில் நல்ல முடிவினை பெற்றுதரும் தலைவராக விளங்குவார் என உலகநாடுகள் பேசிகொண்டிருக்கின்றன‌

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு உத்தரவிட்ட கிரெம்ளின் மாளிகை இன்று இந்திய உத்தரவினை ஏற்றிருப்பது பெரும் வெற்றி உண்மையான இந்திய சுதந்திரத்தின் மகத்தான வெற்றி.

உலக அரங்கில் மிகபெரிய செல்வாக்குடன் வளைய வருகின்றார் மோடி, அவரை இந்திய தமிழகத்தின் சில கும்பல்களை தவிர எல்லோரும் புரிந்து கொண்டாடுகின்றார்கள், ஆனால் இந்த பிடிவாத கும்பலுக்கு மட்டும் புரிவதே இல்லை, இதையெல்லாம் புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும் அது இல்லாதவரை நோக்கி பரிதாபமாக பார்த்துவிட்டு நகரத்தான் முடியும் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

More Watch Videos