24 special

ருத்துராஜ்க்கு கேப்டன் பதவி ஏன்.. பாண்டியவை ரசிகர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? காசி விஸ்வநாதன் விளக்கம்!

H Pandiya, Kasi, Ruduraj
H Pandiya, Kasi, Ruduraj

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி போட்டி நாளை சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது, இந்த போட்டியில் கொல்கத்தா அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் என்றாலே சிஎஸ்க்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி தான் ரசிகர்கள் உற்சாகமாக கண்டு கழிப்பார்கள். இரு அணிகளும் பங்காளிகள் என்று தான் ஐபிஎல் தோன்றியதில் இருந்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடும் சிக்கலை கடந்து தோல்வியயை பெற்றது.


நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை அணியும் தலா ஐந்து கோப்பைகளை சரிசமமாக வைத்துள்ளனர். இந்த சீசனில் யார் கோப்பையை வெற்றி பெற்று மேலே செல்வார்கள் என்ற எதிர்பரப்பு இருந்த நிலையில் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஆரம்பத்தில் கொடுத்தது மும்பை இந்தியன்ஸ், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் கேப்டன்ஷி என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் அதற்கு முன்னதாகவே மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா என்றும் சென்னை அணிக்கு தோனிக்கு பதிலாக ருதுராஜ் கைகுவர்ட் நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ருத்துராஜ் கேப்டனை சென்னை ரசிகர்கள் எல்லை கடந்த வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமித்தது ஏன்? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் கீழ் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாட துவங்கிய போது அடுத்த கேப்டனாக அவர் வருவார் என்று பேச தொடங்கினோம். அதோடு தோனி மற்றும் பிளமிங் ஆகியோர் அவரிடம் ஏராளமான ஆலோசனை நடத்தி அவரை முறைப்படி இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். நிச்சயம் இந்த ஆண்டு அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி உள்ளார். அதோடு தோனி தான் அவரை கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். அதனாலே ரசிகர்கள் அவரை எளிதாக அடுத்த கேப்டனாக ஏற்றுக் கொண்டனர் என காசி விஸ்வநாதன் கூறி கேப்டன் மாற்றம் குறித்து தெளிவை ரசிகர்களுக்கு விளக்கியுள்ளார்.

இது போல் ஏன் மும்பை அணி உரிமையாளர்கள் கூறவில்லை என்பது ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னை அணிக்கு கேப்டன் மாற்றத்தை தோணி தான் முடிவெடுத்துள்ளார் அனால், மும்பையில் எதற்காக ரோஹித்தை மாற்றினார்கள் என இதுவரை எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருபக்கம் மும்பை இந்தியன்ஸை போன்று சென்னை அணி உரிமையாளர்கள் கிடையாது என காசி விஸ்வநாதன் மறைமுகமாக மும்பை அணியை விமர்சிக்கிறார் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இரண்டு அணிகள் தான் மாறி மாறி கோப்பைகளை வெல்கின்றனர் இதனால் இந்த முறை கோப்பையை வெள்ளாத ஆர்சிபி பிளே ஆஃப் சென்று கோப்பையை பிடிக்கும் என்றால் அதுவும் இந்த முறை நடக்காமல் 17வது வருடமாக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது ஆர்சிபி அணி. நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் யார் கோப்பையை வெல்லுவார் என்று உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.