கடந்த சில ஆண்டுகளாகவே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. மேலும் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதை பல புதுமைகளை நிகழ்த்தி வருகிறது. அவற்றில் சில புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை மிகவும் ஆச்சரியப்படுத்த வகையில் அமைந்திருக்கிறது. அவைகள் மனிதர்களால் செய்ய முடியாத விஷயங்களை கூட எளிதில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் மிகக் குறைந்த கால அளவிலேயே செய்து விடுகிறது.
மேலும் மனிதர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கக்கூடிய செயல்களை கூட தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகவும் எளிதாக வெற்றிகரமாக முடித்து விட முடிகிறது. மேலும் தற்போது அனைத்து தொழில் துறைகளிலுமே ஏதாவது ஒரு இயந்திரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இவ்வாறு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்க மனிதர்களின் தேவை அந்த இடத்தில் குறைகிறது. ஆனால் மனிதர்கள் செய்யும் சில தவறுகள் இது போன்ற இயந்திரங்கள் ஒருபோதும் செய்வது கிடையாது. எனவே தொழில்துறைகளில் ஆட்டோமேஷன் மிஷின்கள் முதல் தனிப்பட்ட ரோபோக்கள் வரை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருவதோடு மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமான பங்கினை வகித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தற்பொழுது மருத்துவ துறைகளிலும் பல வகையான அறிவியல் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக ஒரு நோயாளி மருத்துவமனையை அணுகும் பொழுது அந்த நோயாளி பற்றிய அனைத்து விஷயங்களையும் தரவுகள் மூலம் எடுத்து அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கலாம் என்ற திட்டமும் எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் தற்பொழுது அறுவை சிகிச்சை நடக்கும் இடங்களில் கூட ரோபோக்கள் அந்த அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாக செய்து விடுகின்றன. இவற்றைப் பார்க்கும் பொழுது மருத்துவர்கள் இல்லாமல் ரோபோக்களை எல்லா சிகிச்சையும் எளிதில் செய்து விடும் என்று அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே இதுபோன்று பல ஆச்சரியங்கள் தரக்கூடிய கண்டுபிடிப்புகள் இருக்கும் சமயத்தில் தற்பொழுது மருத்துவ துறையில் மற்றும் ஒரு ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!! அது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால்...
உலகத்திலேயே முதல் முறையாக பிரைன் பிரிட்ஜ் என்ற ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது!! இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மனிதனின் தலையை மட்டும் இயந்திரம் மூலம் பிரித்தெடுத்து மற்றொரு உடலில் பொருத்துவது தான்!! இது ரோபோ மட்டும் ஏய் மூலம் நடத்தப்படுகிறது. இதில் முகம் மற்றும் தலையை மொத்தமாக மாற்றுவது அடிப்படையாக அமைந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில் மிகவும் வேகமாகவும், எளிதிலும் இது போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இந்த பிரைன் பிரிட்ஜ் முறையானது ஹை ஸ்பீடு உடையதாக உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு மனிதனின் தலையில் இருக்கும் மூளை முதல் கொண்டு அப்படியே எடுத்து மற்றொரு மனிதனின் உடலில் பொறுத்து விட முடிகிறது.
இது போன்ற சிகிச்சை நரம்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளவர்கள், கேன்சர் மற்றும் பிற குறிப்பிட்ட நோய்கள் உள்ளவர்கள் இது போன்ற சிகிச்சை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை முழுக்க முழுக்க ரோபோட்டிக் முறையில் தான் மேற்கொள்ளப்படும் என இந்த வீடியோவில் கூறியுள்ளனர். மேலும் 2 மனித உடல்களையும் ஒன்றின் பக்கத்தில் ஒன்றை வைத்துவிட்டு இது போன்ற சிகிச்சையை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்று அறுவை சிகிச்சை வரப்போகும் காலத்தில் மருத்துவத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!