கடந்த ஒரு மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை தொட்டுள்ளது. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறியது நேற்று நடந்த குவாலிஃபையர் 2-வது போட்டியில் ஐதராபாத் அணியுடன் - ராஜஸ்தான் அணிகள் மோதியது . இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. மே 26ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.
ஆனால் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு முன்பே சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான பேனரில் ஹைதரபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முகங்களை கொண்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது . குறிப்பாக குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்பாகவே இப்படி பேனர் அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல் சீசன் மேட்ச் பிக்சிங் எனவும் ஏற்கெனவே இறுதிப்போட்டி தீர்மானிக்கப்பட்டுவிட்டது என கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடக்கிறதா அல்லது எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட் தானா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி நடக்கவுள்ளது.
பேனர் விஷயத்தில் நடந்தது என்ன ? குவாலிபையர் முடிவடைவதற்கு முன்னரே வரும் 26 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கும் ஹைதராபாத்துக்கும் தான் என பேனர் வைத்திருந்தது உண்மைதான் அந்தப் புகைப்படம் தான் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் பிளே ஆஃப்ஸூக்குத் தகுதிபெற்ற நான்கு அணிகளின் கேப்டன்களுக்குமே வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இணையத்தில் பரவும் புகைப்படத்தைப் போலவே மைதானத்தின் இன்னொரு புறத்தில் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நடுவிலும் `The Finals' என்கிற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தால் ராஜஸ்தானுக்கும் பெங்களூருவுக்கும்தான் இறுதிப்போட்டி என்பது போலத் தோன்றும். ஆனால், பெங்களூருதான் ஏற்கனவே வெளியேறிவிட்டதே?!
உண்மை என்னவெனில் மைதானம் முழுக்கவும் வரிசையாக நான்கு அணிகளின் கேப்டன்களுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அதில் ஒரு புறத்தில் உள்ள பேனரை மட்டும் புகைப்படம் எடுத்து இணையத்தில் சுற்றலில் விட்டுவிட்டார்கள். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு கன்னாபின்னாவென ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது.கடந்த ஆண்டு கூட ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாகவே அகமதாபாத் மைதானத்தில் "சாம்பியன்ஸ் குஜராத்" என்று எல்இடி போர்டில் டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கதுபிளே ஆஃப்ஸ் மொத்தமும் பிசிசிஐயின் கட்டுப்பாட்டில்தான் என்பதால் மைதானத்தின் ஒரு சுவரில் வரையப்பட்டிருக்கும் தோனியின் ஓவியத்தைக் கூட பெரிய பேனரைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்