Cinema

இணையத்தை கலக்கும் "ஹே மனிதா பாடல்" இது வேறு காவிகளின் அடையாளம்!

hey manitha song
hey manitha song

செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாசகத்தையும் முயன்றால் முடியாதது என்ற எதுவும் இல்லை என்பதையும் நிகழ்த்தி காட்டி இருக்கும் பாடல் ஒன்று இணையத்தை மெல்ல ஆட்கொண்டு வருகிறது, இதில் TNNEWS24 குழு கவனித்த சில தகவல்களை இங்கு கொடுக்கிறோம்.


ஆனந்த் T பிரசாத் இயக்கத்தில் மணிகண்டன் தயாரிப்பில் புதுமுக குழு நடிப்பில் உருவாகி இருக்கும் பாடல் ஹே மனிதா, இந்த பாடல் உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து ஓடுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும், அதில் எந்த தொழிலாக இருந்தாலும் செய்யுங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தில் உருவாகி  இருக்கிறது.

பாடல் வரிகளும், 5 நிமிடத்தில் சொல்ல வந்த கருத்துக்களையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர், அதில் புதுமுகமாக நடித்த இளம் நடிகர்களும் தங்கள் பங்கிற்கு பங்களிப்பை கொடுத்துள்ளனர், பாடல் வரிகள் மற்றும்  பின்னணி இசை ஆகியவை நிச்சயம் இளைஞர்களுக்கு வரும் காலத்தில் தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக அமையும் என்று கூறலாம்.

உணவு டெலிவரி செய்யும் காவிகள் காவி நிறத்திலான உழைப்பாளிகளின் வலியையும் இப்பாடல் கொடுத்து இருக்கிறது, மீடியான் யூடுப் சேனலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் LINK கீழே இணைக்கப்பட்டுள்ளது.