24 special

சென்னை மேயர் பிரியா வெளிநாடு சென்றது எதற்கு....?பரபரப்பு தகவல்...!

Mayor priya
Mayor priya

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவில் பெய்ய துவங்கிய மழை, விடிய விடிய கொட்டித்தீர்த்தது. பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால், சாலைகள் குளம் போல் காட்சி அளிக்கிறது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு , ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில், நேற்று காலை மழை தற்போது வரை வெளுத்து வருகிறது, பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இப்படி சென்னை ஒரு நாள் மழைக்கே தவித்து கொண்டு இருக்க சென்னை மேயர் பிரியா வெளிநாடு சென்று இருப்பதாக வெளியான தகவல் அடுத்த பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தும் வகையில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும், இந்த பயணத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் ஐஏஎஸ், தலைமை பொறியாளர் என்.மகேசன், செயற்பொறியாளர் விஜய் அரவிந்த் ஆகியோர் சென்று இருக்கிறார்களாம்.

சென்னை மழையால் அவதியில் இருக்க தற்போது சென்னை மேயர் பிரியா தொடங்கி முக்கிய ஆட்சியாளர்கள் பலரும் வெளி நாட்டில் இருக்கும் சம்பவம் சென்னை மக்களை கொந்தளிக்க செய்து இருக்கிறது, மழை நீர் வடிகால் பணிகள் 95% முடிவடைந்து விட்டதாக மேயர் பிரியா கடந்த முறை சொன்னார், இதுதான் சென்னையில் வடிகால் பணிகள் முடிவு அடைந்ததற்கான அர்த்தமா?

மழை காலம் தொடங்காத நிலையிலேயே இப்படி சென்னை தவிக்கிறது என்றால் அடை மழை காலம் தொடங்கினால் சென்னையின் நிலை என்ன என வசமாக பொதுமக்கள் இப்போதே மேயர் பிரியா தொடங்கி முதல்வர் ஸ்டாலின் என அனைவரையும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிட தக்கது.