24 special

செந்தில் பாலாஜி வழக்கின் இறுதி அத்தியாயம்...!தமிழக அரசியலில் பெரும் மாற்றம்...!

Senthil balaji
Senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். திடீர் என்று கைது செய்தியை அறிந்த செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வழி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த சூழலில் பல்வேறு வழக்குகள் நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில் இறுதியாக சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கொடுத்தது.

இதற்கு அடுத்து செந்தில் பாலாஜியை 8 நாட்கள்   அமலாக்க துறை கஷ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு போட்டது ஆனால் அதில் பல்வேறு நிப்பாத்தனைகளை நீதிமன்றம் விதித்தது, இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை காரணமாக கொண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் விசாரணையில் தாமதம் உண்டானது, மேலும் சாட்சிகள் பல அழிக்கப்படலாம் எனவும் அமலாக்கதுறை சந்தேகம் அடைந்தது, கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை நாள் என்பதால் இன்றைய தினம் திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமலாக்கதுறை உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நீக்க வேண்டும் எனவும், செந்தில் பாலாஜிக்கு அரசு மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அமலாக்கதுறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது, அவசர வழக்காக விசாரணை செய்யவும் அமலாக்கதுறை கோரிக்கை வைத்து இருக்கிறது.

இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்து கொள்ள படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது, அமலாக்க துறை சார்பில் நீதிமன்றத்தில் இரண்டு முக்கிய விஷயங்களை சுட்டி காட்ட அமலாக்க துறை முடிவு செய்து இருக்கிறதாம்.

ஒன்று செந்தில் பாலாஜி வழக்கிற்கு பயந்து போலியாக நெஞ்சு வழி என காரணம் காட்டுவதாகவும் AIMS மருத்துவர்களை கொண்டு செந்தில் பாலாஜி உடலை சோதனை செய்யவேண்டும் எனவும் இரண்டாவது செந்தில் பாலாஜியை 20 நாட்கள் அமலாக்க துறை தங்களது கஷடடியில் எடுத்து விசாரணை செய்யவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த விதிமுறைகளை தகர்த்த வேண்டும் எனவும் அமலாக்கதுறை வழக்கில் குறிப்பிட இருக்கிறதாம்.

செந்தில் பாலாஜி வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் கொடுக்கப்படும் தீர்ப்பு, செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல ஆளும் திமுக அரசிற்கும் மிக முக்கியமானது என்பதால் என்ன தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வர போகிறது என காத்து இருக்கிறதாம் இரண்டு தரப்பும்.

உச்ச நீதிமன்ற விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை அமலாக்க துறை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அது செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் எனவும் குறிப்பாக மருத்துவ காரணங்களை காரணமாக கொண்டு சென்னையில் தங்கி இருக்கும் செந்தில் பாலாஜியை அப்படியே டெல்லி அழைத்து செல்ல அமலாக்க துறை தயாராகி வருகிறதாம்.

அதற்கு முன்னர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யவும் எப்படியாவது அவரை அமலாக்க துறை விசாரணை வளையத்தில் கொண்டு செல்லாமல் காப்பாற்றவும் முழு தமிழக அரசு எந்திரமும் தயாராக இருப்பதால், செந்தில் பாலாஜி வழக்கின் இறுதி அத்தியாயம்உச்ச நீதிமன்றம் வழங்க கூடிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசியலிலும் மாற்றத்தை உண்டாக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.